காங். எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவையில் தடைபட்ட டெண்டுல்கரின் கன்னிப்பேச்சு

குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கள் இன்று பேச இருந்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 


ஜெயலலிதா மகள் என வழக்கு

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கேட்டு பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.  


மாநிலங்களவையில் பேச இயலாத சச்சின்

நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதன்முறையாக ஆற்றவிருந்த உரை, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் தடைப்பட்டது. 


2ஜி தி.மு.க.கொண்டாட்டம்

2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தி.மு.க .செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். திமுக தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தீர்ப்பை வரவேற்றனர் 


2ஜி வழக்கில் தீர்ப்பு நேர்மைக்கான சான்று அல்ல: மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கருத்து

2ஜி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது நேர்மைக்கான சான்று அல்ல என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். 


ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நிறைவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஒருசில இடங்களில் இயந்திரக் கோளாறு, வாக்காளர்கள் புகார் ஆகிய சம்பவங்களைத் தவிர அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


2 ஜி தீர்ப்பு தலைவர்கள் கருத்து

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் தீர்ப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 


‘சி.பி.ஐ வேண்டுமென்றே வழக்கை குழப்பியதா?’: 2ஜி தீர்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து

இந்தியாவையே உலுக்கிய ஊழல் வழக்கில் சி.பி.ஐ வேண்டுமென்றே குழப்பியதா? என்று 2ஜி தீர்ப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். 


ஜெயலலிதா உடலை டி.என்.ஏ சோதனை செய்ய ஏன் உத்தரவிட கூடாது?: ஐகோர்ட் நீதிபதி கேள்வி

ஜெயலலிதா மகள் என உரிமை கோரி அம்ருதா தாக்கல் செய்த வழக்கில், ஜெயலலிதா உடலை டி.என்.ஏ பரிசோதனை செய்ய ஏன் உத்தரவிட கூடாது என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 


ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு நேரம் முடிந்தது: காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடிவடைந்ததை அடுத்து, வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது. 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி