3 ஆயிரம் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் முதல் தற்போது வரை கடும் பனிப்பொழிவு காரணமாக  நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரம் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 


முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை கொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் ஒசாமா பின்லேடன் இடம்பெயர்ந்ததாக தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை கொலை செய்யும் திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவதற்காகத்தான் ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழகம் உள்ளிட்ட 8 மாநில உயர்நீதிமன்றங்கள் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை என உச்சநீதிமன்றம் தகவல்

சிறைகளில் கைதிகள் மரணம் அடைவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் ஆயிரத்து 382 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு மனிதாபிமானமற்ற வகையில் கைதிகள் நடத்தப்படுவதே காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது.  


ஆள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை

ஆள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 


இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 69 பேர் இன்று விடுதலை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 140-க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  


அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

இந்திய தேசிய காங்கிரசின் 133-வது தொடக்க நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். 


குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷண் ஜாதவை அவரது குடும்பத்தினர் சந்திக்கச் சென்றபோது நெறிமுறைகளை மீறி, பாகிஸ்தான் நடந்துகொண்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.  


ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கியதில் விதிமீறல்

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கியதில் விதிமீறல் நடைபெற்றிருப்பதாக தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 


முத்தலாக் சட்ட மசோதா, குரானுக்கு எதிரானதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அகில இந்திய இஸ்லாமிய மகளிர் தனி சட்ட வாரியம் தெரிவித்துள்ளது

முத்தலாக் விவகாரத்தை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வகைசெய்யும் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.  


தமிழகத்தில் ஓக்கி புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழு இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளது. 

ஓக்கி புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் நேற்று தமிழகம் வந்தனர். கேரளாவில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். 


உலகம்

நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது