நாடாளுமன்ற அவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பாராட்டு

கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகளால் பல்வேறு காரணங்களை முன்னிட்டு முடக்கப்பட்டு வந்த நாடாளுமன்றம், இன்று காலையிலிருந்து சுமுகமாக நடைபெறுவதையொட்டி அவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். 


ஜப்பான் நாட்டுக்கு ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை வழங்க ஒப்புக்கொண்டதன் மூலம் ஆயுத கட்டுப்பாட்டு உடன்படிக்கையை அமெரிக்கா மீறியுள்ளது என ரஷ்ய கண்டனம் தெரிவித்துள்ளது

அமெரிக்காவிடம் இருந்து இரண்டு அமெரிக்க ஏஜிஸ் அஷோர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஜப்பான் அமைச்சரவை சென்ற வாரம் முடிவு செய்தது. வட கொரியாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில்,  இது மிகவும் அவசியமான ஒன்று என ஜப்பானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. 


டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தற்காப்பு பயிற்சியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

தலைநகர் டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 


ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 29ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள  மூன்று மக்களவை தொகுதிகளுக்கு ஜனவரி 29ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உயிரிழப்பு

மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


முத்தலாக் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடைச் சட்ட மசோதா, நீண்ட விவாதத்துக்குப் பின்னர், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. முன்னதாக, இந்த மசோதாவில் ஒவைசி உள்ளிட்டோர் கொண்டுவந்த திருத்தங்கள் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன. 


3 ஆயிரம் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் முதல் தற்போது வரை கடும் பனிப்பொழிவு காரணமாக  நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரம் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 


முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை கொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் ஒசாமா பின்லேடன் இடம்பெயர்ந்ததாக தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை கொலை செய்யும் திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவதற்காகத்தான் ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழகம் உள்ளிட்ட 8 மாநில உயர்நீதிமன்றங்கள் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை என உச்சநீதிமன்றம் தகவல்

சிறைகளில் கைதிகள் மரணம் அடைவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் ஆயிரத்து 382 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு மனிதாபிமானமற்ற வகையில் கைதிகள் நடத்தப்படுவதே காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது.  


ஆள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை

ஆள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி