ஹரியானாவில் 6 பேர் கொலை.

ஹரியானா அருகே முன்னாள் ராணுவ அதிகாரி மருத்துவமனைக்குள் புகுந்த 6 பேரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  


காஷ்மீர், பீகாரில் துப்பாக்கிச்சூடு.

காஷ்மீரில் காவல்நிலையம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.  


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு. 

தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையை மத்திய அரசு கட்டவிழ்ந்துவிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் காந்தி குற்றச்சாட்டு    


ஜாதி ரீதியிலான கலவரங்களுக்கு காங்கிரஸ் சதிச்செயலே காரணம்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஜாதி ரீதியிலான கலவரங்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்ட சதிச்செயலே காரணம் என பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  


சீனா ஊடுருவலால் இந்திய ராணுவம் படைகள் குவிப்பு.

அருணாசலப் பிரதேச எல்லைப்பகுதியில், சீனப்படைகள் ஊடுருவியதால் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் எழுந்துள்ளது. 


அரசு ஊழியர்கள் ரத்ததானம் - மத்திய அரசு விடுமுறை.

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அசாமில் அடிப்படை உரிமைகள் வழங்க மறுப்பு 

அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வ தேசிய பதிவு பெறாதவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். 


தாஜ்மஹாலில்  புதிய கட்டுப்பாடுகள்.

பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு தாஜ்மஹாலுக்குள் நாள்தோறும் உள்நாட்டைச் சேர்ந்த 40 ஆயிரம் பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


மகாராஷ்டிராவில் முழு அடைப்பு போராட்டம்.  

புனே கலவரத்தை கண்டித்து மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 


சென்னை உயர்நீதிமன்றம் தாய்ப்பால் குறித்து 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

பேறுகால விடுமுறை காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வரும் 22 ஆம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 


உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை