கிருஷ்ணா நதிநீர் திறப்பு.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 


பூரி ஜெகன்நாதர் கோவில் செல்போன் தடை.

புகழ் பெற்ற  பூரி ஜெகன்நாதர் கோவிலில் பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 


தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம்

மத்திய அரசின் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது குறித்து டெல்லியில் இன்று நடைபெறும், இந்திய மருத்துவ கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. 


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப்.பயிற்சி முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1 வீரர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திப்புராவை அடுத்த லெத்போராவில்  சி.ஆர்.பி.எப். பயிற்சி மையம் உள்ளது.  


ஆதார் இல்லாமல் மருத்துவம் செய்ய மறுப்பு

ஹரியாணா மாநிலத்தில் ஆதார் அட்டையின்றி சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுத்ததால், கார்கில் போரில் மரணம் அடைந்த வீரரின் மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே, இஸ்லாமிய மதரஸா பள்ளியில், பாலியல் தொல்லைக்கு ஆளான 51 மாணவிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

லக்னோவின் சஹதத்கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் மதரஸா எனப்படும் இஸ்லாமிய மதக்கல்விப்  பள்ளியில் 125-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 


பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்திய சிறுவர்கள் 22 பேரை காணவில்லை.

இந்தியாவில் இருந்து சென்ற ஆண்டில் சட்ட விரோதமாக பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 22 சிறுவர்களைக் காணவில்லை. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 


காங்கிரஸ் கட்சி  தோற்றதற்கு கட்சியினரே காரணம் - காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி

இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி  தோற்றதற்கு, கட்சியினரே காரணம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


மத்திய அரசின் திட்டங்கள் நாடு முழுவதிலும் உள்ள மக்களை சென்றடைந்துள்ளதா என்பது குறித்து பிரதமர் மோடி ஆய்வு

மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களின் கருத்துகளை அறிந்து தெரிவிக்குமாறு பாரதிய ஜனதா எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 


இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 144 இந்திய மீனவர்கள் தாயகம் வந்தனர். 


உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்

சினிமா

400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்

விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை