இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 69 பேர் இன்று விடுதலை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 140-க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  


அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

இந்திய தேசிய காங்கிரசின் 133-வது தொடக்க நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். 


குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷண் ஜாதவை அவரது குடும்பத்தினர் சந்திக்கச் சென்றபோது நெறிமுறைகளை மீறி, பாகிஸ்தான் நடந்துகொண்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.  


ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கியதில் விதிமீறல்

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வாங்கியதில் விதிமீறல் நடைபெற்றிருப்பதாக தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 


முத்தலாக் சட்ட மசோதா, குரானுக்கு எதிரானதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அகில இந்திய இஸ்லாமிய மகளிர் தனி சட்ட வாரியம் தெரிவித்துள்ளது

முத்தலாக் விவகாரத்தை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வகைசெய்யும் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.  


தமிழகத்தில் ஓக்கி புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழு இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளது. 

ஓக்கி புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் நேற்று தமிழகம் வந்தனர். கேரளாவில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். 


கிறிஸ்துமஸ் மரங்கள் – மறுசுழற்சி

கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்ட அலங்காரங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த பின் இதனை தூக்கி எரிவதை விடுத்து, உபயோகமான பல வழிகளில் மறுசுழற்சி செய்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர். 


திஹார் சிறையில் உள்ள ரவுடி சோட்டா ராஜனை கொலை செய்ய தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளதாக தகவல்

திஹார் சிறையில் உள்ள ரவுடி சோட்டா ராஜனை கொலை செய்ய தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது தொடரப்பட்ட முந்தைய வழக்கு ஒன்று தற்போது மாநில அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

கோரக்பூர் மாவட்டம் பிபிகஞ்ச் என்னுமிடத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கடந்த 1995-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத், சிவ பிரதாப் சுக்லா, ஷீத்தல் பாண்டே உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவானது. 


முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து தங்களை விடுவிக்கக் கூடாது என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

உலகின் மிகப்பெரிய துணைநிலை ராணுவமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை செயல்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு படைப்பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 30 சதவிகிதம் பேர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள்.   


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி