ஹாப்மேன் கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

ஹாப்மேன் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்த் வீரர் ரோஜர் பெடரரும், ஜப்பானின் யூகி சுகிதாவும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய பெடரர், யூகி சுகிதாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.  


கேட்டலோனியா மாகாணத்தில் மீண்டும் அரசமைக்க ஸ்பெயின் அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் அதிபர் கார்லஸ் ப்யூஜ்டிமோண்ட் வலியுறுத்தி உள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி மாகாணமான கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என  பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  


இந்தியாவின் கண்டனத்தை அடுத்து, பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வாலித் அபு அலியை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. 

மும்பையில் 164 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு சதியில் குற்றம்சாட்டப்பட்டவரும், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட ஜமாத் உத்தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சையீத், பாகிஸ்தான் சிறையில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார். 


எல்லை தாண்டியதாக 13 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு.

எல்லை தாண்டியதாக 13 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது. மீனவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


தீ விபத்தில் சேதமடைந்த அர்ஜென்டினாவின் பனிக்கட்டிகளை உடைக்கும் கப்பல், தற்போது சரி செய்யப்பட்டு மீண்டும் அன்டர்டிகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் நியூசிலாந்து ஆகிய ஏழு நாடுகளும் அண்டார்டிகா கண்டத்துக்கு உரிமை கொண்டாடினர்.  


வடகொரியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை சீனா மறுப்பு

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தடையையும் மீறி வடகொரியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. 


உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே, இஸ்லாமிய மதரஸா பள்ளியில், பாலியல் தொல்லைக்கு ஆளான 51 மாணவிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

லக்னோவின் சஹதத்கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் மதரஸா எனப்படும் இஸ்லாமிய மதக்கல்விப்  பள்ளியில் 125-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். 


பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்திய சிறுவர்கள் 22 பேரை காணவில்லை.

இந்தியாவில் இருந்து சென்ற ஆண்டில் சட்ட விரோதமாக பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 22 சிறுவர்களைக் காணவில்லை. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 


மியான்மர் - இந்தியா எல்லையில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் லேசான அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.  


இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 144 இந்திய மீனவர்கள் தாயகம் வந்தனர். 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி