அம்பத்தூரில் நடைபெற்ற டாஸ்மாக் பார் ஏலத்தை 80 சதவீதம் பார் உரிமையாளர்கள் புறக்கணித்தனர்

தென் சென்னை மற்றும் மத்திய சென்னைக்கு உட்பட்ட 190 டாஸ்மாக் பார்களுக்கான ஏலம் அம்பத்தூர் குடோனில் நடைபெற்றது. 


சிலிண்டர் விலையை உயர்த்தும் நடைமுறை இரண்டு மாதங்களுக்கு முன்பே திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக தகவல்

மத்திய அரசு அனுமதியுடன் எண்ணெய் நிறுவனங்கள், 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்தி வருகின்றன.  


புத்தாண்டை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் மட்டும் 3ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 


தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 


தமிழக சட்டப்பேரவை, ஜனவரி 8ஆம் தேதி கூடும் என அறிவிப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை, ஜனவரி 8ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. 


தமிழகத்தில் ஓக்கி புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இரண்டவாது நாளாக இன்று ஆய்வு

ஓக்கி புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை  ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் நேற்று முன்தினம் தமிழகம் வந்தனர். 


முத்தலாக் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடைச் சட்ட மசோதா, நீண்ட விவாதத்துக்குப் பின்னர், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. முன்னதாக, இந்த மசோதாவில் ஒவைசி உள்ளிட்டோர் கொண்டுவந்த திருத்தங்கள் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன. 


முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை கொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத்தான் ஒசாமா பின்லேடன் இடம்பெயர்ந்ததாக தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவை கொலை செய்யும் திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவதற்காகத்தான் ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழகம் உள்ளிட்ட 8 மாநில உயர்நீதிமன்றங்கள் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை என உச்சநீதிமன்றம் தகவல்

சிறைகளில் கைதிகள் மரணம் அடைவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் ஆயிரத்து 382 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு மனிதாபிமானமற்ற வகையில் கைதிகள் நடத்தப்படுவதே காரணம் என்றும் கூறப்பட்டிருந்தது.  


இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 69 பேர் இன்று விடுதலை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 140-க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி