மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொய்யான தகவலை தெரிவிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு
தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் கைவிடப்பட்டதாக எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொய்யான தகவலை தெரிவிப்பதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் கிறிஸ்துமஸ் வாழ்த்து
அன்பை பகிர்ந்து ஆனந்தம் அடைய இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ், தமது கிறிஸ்துமஸ் வாழ்த்தினில் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் அஞ்சலி
காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரில் பொதுமக்களின் அஞ்சலிக்க வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு
கடந்த நிதியாண்டில் பண மோசடி காரணமாக வங்கிகளுக்கு சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
வரும் பிப்ரவரி மாதம் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
2 ஜி முறைகேடு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லையே தவிர குற்றம்மேநடைபெறவில்லை என நீதிமன்றம் கூறவில்லை: நீதிபதி ஜி.எஸ்.சிங்வி
2 ஜி முறைகேடு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றுதான் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே தவிர, குற்றம் நடைபெறவே இல்லை என்று கூறவில்லை என அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி கூறியுள்ளார்.
ஆதாரங்கள் இருந்தாலும் நிரூபிக்க முடியாத வழக்காகிவிட்டது: வானதி கருத்து
சுப்ரீம் கோர்ட்டு முகாந்திரம் இருப்பதாக கூறியும் ஆதாரங்கள் இருந்தாலும் நிரூபிக்க முடியாத வழக்காகிவிட்டது என பாரதிய ஜனதா வக்கீல் வானதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மகள் என வழக்கு
ஜெயலலிதாவின் மகள் என உரிமை கேட்டு பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நிறைவு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஒருசில இடங்களில் இயந்திரக் கோளாறு, வாக்காளர்கள் புகார் ஆகிய சம்பவங்களைத் தவிர அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.