சென்னை ராஜ்பவனில் மகளைப் பாதுகாப்போம், மகளுக்கு கல்வி அளிப்போம் என்பதை வலியுறுத்தி நாட்டுப்புற கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பிராந்தியத்தின் பாடல் மற்றும் நாடகம் பிராந்திய பிரிவு சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.  


பெரியகுளம் சொக்கநாத ஈஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், அங்கிருந்த ஐம்பொன் சிலைகள் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வராக நதிக்கரையில், பழமையான சொக்கநாத ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.  


பெரியகுளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளிகளை தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்துள்ளது.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காமல், நேயாளிகளை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக கூறி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மருத்துவமனைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். 


சென்னை கோயம்பேட்டில் காய்கறி மற்றும் பழ கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது

தினமும் வீணாகும் சுமார் 14 டன் காய்கறி, பழ கழிவுகளில் இருந்து 800 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த காய்கறி, பழ கழிவுகளில் இருந்து 800 யூனிட் மின்சாரம் தயாரிக்க 150 யூனிட் மின்சாரம் செலவாகிறது. 


வாணியம்பாடியில் புதிதாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்துள்ளார்

வாணியம்பாடி, மார்த்தாண்டம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் புதிய தொழிலாளர் நல அலுவலகங்கள் மற்றும் சென்னையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கென கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் கூடிய பன்மொழி உதவி மையம் தொடக்க விழா வாணியம்பாடியில் நடைபெற்றது. 


வேலூரில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையி‌ல் வ.உ.சி நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர், அவரது மகன் அருண்குமார், ராஜேந்திரன் ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர். 


திருவாரூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 


திருச்சி அருகே கார் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்

ஈரோடு புலாங்குட்டையை சேர்ந்தவர் கீர்த்தனா. இவர் நேற்று தனது மாமியாருடன் காரில், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். 


பழனி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. கடந்த 22ஆம் தேதி விபத்தில் சிக்கிய இவரது மனைவி பொன்மலருக்கு, காலில் முறிவு ஏற்பட்டது. 


புதுவையின் வளர்ச்சி திட்டங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க நபார்டு வங்கி முடிவு செய்துள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நபார்டு வங்கி தலைவர்,  பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. 


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி