தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் தொடங்கும்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை, வரும் ஜனவரி 8-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. 


தேனியில் போலி மருத்துவரை கைது செய்த போலீசார், அவர் பயன்படுத்திய மருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் தர்மர் என்பவர், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தான் மருத்துவர் என்று கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு சிகிச்சையும் அளித்துள்ளார். 


வாணியம்பாடி அருகே ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே நியூடவுன் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக 30க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளதால், நாள்தோறும் இந்த ரயில்வே கேட்டை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. 


போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இதைதொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய 13வது ஊதிய ஒப்பந்தம், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.  


முத்தலாக் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

தலாக் என்று மூன்று முறை கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை இஸ்லாத்தில் உள்ளது. தொலைப்பேசி மூலமாகவும், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தலங்கள் வாயிலாகவும் தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைகள் அண்மை காலமாக அதிகரித்துள்ளது. 


தமிழகத்தில் ஓக்கி புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழு இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளது. 

ஓக்கி புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் நேற்று தமிழகம் வந்தனர். கேரளாவில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். 


மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

தமிழக நீர்ப்பாசன திட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி 2 ஆயிரத்து 35 கோ டி ரூபாய் கடன் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 


தமிழக கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு குளிர்ந்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் பருவமழை குறைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது. பனிக்காலம் என்பதால், காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்காற்று வீசுகிறது. 


குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் தினசரி வாழ்க்கை நடத்த சிரமம்

சென்னை மைலாப்பூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால்  அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். 


இணையதள வசதிகளை செய்து தராமல் மெத்தனம் காட்டிவரும் மாநில அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவிப்பு

மடிக்கணினிக்கான இணையதள வசதிகளை செய்து தராமல் மெத்தனம் காட்டிவரும் மாநில அரசைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் மடிக்கணினிகளை திரும்ப ஒப்படைத்தனர்.  


உலகம்

இத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு

விளையாட்டு

ஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி