விவசாயம்

ஜாதிக்காய் விளைச்சல் அதிகம் ஆனால் விலை குறைவு - கொடைக்கானல் விவசாயிகள் கவலை !!

மருத்துவ குணமிக்க ஜாதிக்காயை திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த வருடம் விளைச்சல் அதிகமாக உள்ள போதிலும் விலை மட்டும் கடந்த ஆண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாக விற்பனை செய்து வருவதாக கவலை தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்  பகுதிகளான கானல் காடு, தடியன் குடிசை கிராமங்களில் விவசாயிகளால்  அதிகளவில் ஜாதிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வழக்கத்தை விடவும் இம்முறை அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாக கூறும் விவசாயிகள். கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக அதிகளவில் விளைந்துள்ள ஜாதிக்காய்கள் வாங்க ஆள் இல்லாமல், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வியாபாரிகளிடம் தேடி சென்று மிகவும்  குறைவான விலைக்கு விற்பனை செய்து வருவதாக கவலை தெரிவித்தனர். 

மேலும், விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கும் ஜாதிக்காய்கள் வீணாக குப்பைத்தொட்டிக்கு செல்லும் அவலத்தை தடுக்க அரசு உடனைடியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, பெருநகர காய்கறி சந்தைகளை திறந்து மீண்டும் இயல்பு நிலை திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்தனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700