விவசாயம்

இலைப் பேன் தாக்குதலால் நாசமாகும் வேர்க்கடலை பயிர்கள்..! வேதனையில் வேலூர் விவசாயிகள்...

வேலூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வேர்க்கடலை பயிர்கள் இலைபேன் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வேலூர் ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் வேர்க்கடலை பயிரினை 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். தற்போது வேர்க்கடலை காய்ப் பிடிக்கும் நேரத்தில் வேர்க்கடலை செடிகள் இலைப்பேன்'கள் தாக்க தொடங்கியுள்ளன. செடிகள் முழுவதையும் இலைப் பேன்கள்   தாக்குவதால்  ஏக்கருக்கு 20 மூட்டைகள் விளைச்சல் கிடைக்க வேண்டிய இடத்தில் தற்போது  ஏக்கருக்கு மூன்று மூட்டை மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் வாங்கி வேர்க்கடலையை பயிரிட்ட விவசாயிகள் பெரிதும் கலக்கமடைந்துள்ளனர். எனவே  உடனடியாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் இந்த இலை பேனை கட்டுபடுத்த  மருந்துகளை மாணிய விலையில் வழங்கி மருந்துகளை தெளிக்க இயந்திரங்களையும் வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.விவசாயிகளின் மத்தியில் இலைபேனை முற்றிலும் ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இல்லையேன்றால் வேர்க்கடலை மகசூல் முற்றிலும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றும்  விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

 

 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700