விவசாயம்

கிசான் திட்டத்தில் முறைகேடு, வேளாண்துறை ஊழியர்கள் பணிநீக்கம் !!

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மூன்று வேளாண் உதவி இயக்குநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

விவசாயிகளுக்கான நிதியுதவியில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்றது. கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் உதவி இயக்குநர்கள் அமுதா, ராஜசேகரன் ஆகியோரை  பணியிடை நீக்கம்  செய்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம் உத்தரவிட்டுள்ளார். மேலும் 7 வட்டார தொழில்நுட்ப ஊழியர்கள், நான்கு  பயிர் அறுவடை பரிசோதகர்கள், இரண்டு கணினி ஆபரேட்டர்கள் என மொத்தம் பதிமூன்று தற்காலிக ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், இந்த விவகாரத்தில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வல்லம் வேளாண் துறை அலுவலக உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கமும், மூன்று தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கமும்  செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate