விவசாயம்

'பயிர்க் காப்பீட்டுத் தொகை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்' - அமைச்சர் காமராஜ்

மத்திய அரசின் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்குவது அதில் கணக்கீடுகளில் சில பிரச்சினைகள் இருப்பதால் பயிர் காப்பீடு குறித்து மீண்டும் கணக்கிட்டு வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் கம்பெனி களை வலியுறுத்தி வருகிறோம். பயிர் காப்பீடு தொகை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்" என்றார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "தமிழக முதல்வரின் உத்தரவின் படி தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழகத்தில் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதில் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இன்று ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் இளைஞர்கள் எழுச்சியுடன் பங்கேற்பது வரவிருக்கும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது, தமிழக முதல்வரும் துணை முதல்வரும் அமைந்திருக்கும் இந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு மிகப்பெரிய ஊன்று கோலாக அமைந்துள்ளது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் ஒப்பற்ற தலைவர்கள் எனவே அவர்கள் குறித்து போஸ்டர்கள் வெளியிட்டது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் பதில் அளித்திருக்கிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்குவது அதில் கணக்கீடுகளில் சில பிரச்சினைகள் இருப்பதால்  பயிர் காப்பீடு குறித்து மீண்டும் கணக்கிட்டு வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் கம்பெனி களை வலியுறுத்தி வருகிறோம். பயிர் காப்பீடு தொகை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்" என்றார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700