அரசியல்

நீட் தேர்வு குறித்த சூர்யாவின் பேச்சு, பொதுநலமா ? சுயநலமா ?

நீட் தேர்வு வருவதற்கு முன்பு வரை, நாட்டில் மருத்துவம் படிப்பதற்கு முறையான மதிப்பெண் பெறாத மாணவர்கள் கூட செல்வ செழிப்பின் காரணமாக கோடிக்கணக்கில் கல்லூரிகளுக்கு நன்கொடை செலுத்தி மருத்துவ படிப்பில் சேர்ந்து தரமற்ற மருத்துவர்களாக சமூகத்தில் உலாவிக் கொண்டிருந்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட கருத்து தமிழகம் முழுக்க பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


தனது அறிக்கையில், ஒரே சமயம் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற அவலம் எதுவும் இல்லை. ஒரு தேர்வெழுதப் செல்ல மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் நிலைக்கு நாம் சென்று இருக்கிறோம் என்று சூர்யா மத்திய அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.


மேலும், அவர் உயிருக்குப் பயந்து காணொளியில் வழக்குகளை நடத்தும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய்த் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்று நீதித்துறையையும் காட்டமாக விமர்சித்து இருந்தார். 


சூர்யாவின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீதித்துறையை களங்கப்படுத்திய நடிகர் சூர்யாவை, நீதிமன்றம், "நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது. குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் குறித்து விமர்சிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்" என்று அவரை எச்சரித்திருந்தது.


நீட் தேர்வு வருவதற்கு முன்பு வரை, நாட்டில் மருத்துவம் படிப்பதற்கு முறையான மதிப்பெண் பெறாத  மாணவர்கள் கூட செல்வ செழிப்பின் காரணமாக கோடிக்கணக்கில் கல்லூரிகளுக்கு நன்கொடை செலுத்தி மருத்துவ படிப்பில் சேர்ந்து தரமற்ற மருத்துவர்களாக சமூகத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். 


இந்த அவல நிலையை மாற்றி திறமை உள்ள மாணவர்களின் மருத்துவராகும் கனவிற்கு பணம் ஒரு தடையில்லை என்றும் திறமை இருந்தால் போதும் என்ற புது நம்பிக்கையை மாணவர்கள் மனதில் உருவாக்கி இருக்கிறது மத்திய அரசின் நீட் தேர்வு.  


ஆனால்,  நீட் தேர்வுக்  குறித்த புரிதல் கொஞ்சமும் இல்லாததன் காரணத்தாலும், சமூகத்தில் தங்களை பேசுபொருளாகவே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் சூர்யா போன்ற நடிகர்களும், அரசியல்வாதிகளும் இந்த தேர்வை வைத்து சுயலாபம் ஈட்டி வருவது தான் வருத்தமான விஷயம் என்கின்றனர், நீட் தேர்வு குறித்த தெளிவான புரிதல் உடையவர்கள்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate