விவசாயம்

டெல்டா மாவட்டங்களில் உரம் தட்டுப்பாடு....கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை

உரங்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி, டெல்டா மாவட்டங்களில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாசியம், டி.ஏ.பி., கூட்டு உரங்கள் உள்ளிட்டவற்றை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. கவனம்இவற்றை வேளாண் துறை பெற்று, மாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கிறது. கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில், இவை விற்பனை செய்யப்படுகின்றன. 'ஆதார்' அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே, உரங்கள் வழங்கப்படுகின்றன. உரங்கள் இருப்பு, விற்பனையை கண்காணிப்பதற்கு, 'ஆன்லைன்' வாயிலாக, வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது.


இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடியை தொடர்ந்து, சம்பா பருவ நெல் சாகுபடிக்கான ஏற்பாடு துவங்கியுள்ளது. இதற்காக, நேரடி நெல் விதைப்பு, திருந்திய நெல் சாகுபடி, நடவுப் பணிகளில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். பயிர்களுக்கு அடி உரம் மற்றும் மேல் உரம் இடுவதற்காக, யூரியா உள்ளிட்ட உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால், டெல்டா மாவட்டங்களில், உரங்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


யூரியா மூட்டை, 290 ரூபாய்க்கு பதிலாக, 350 ரூபாய்; டி.ஏ.பி., 1,130 ரூபாய்க்கு பதிலாக, 1,250 ரூபாய்; கூட்டு உரங்கள், 1,030 ரூபாய்க்கு பதிலாக, 1,200 ரூபாய்; பொட்டாசியம், 650 ரூபாய்க்கு பதிலாக, 750 ரூபாய் வரை, தனியார் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கூடுதல் விலையில் உரங்கள் விற்கப்படுவதை, வேளாண் இணை மற்றும் துணை இயக்குனர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், விவசாயிகள் தவித்து வருகின்றனர். இப்பிரச்னையில் வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கவனம் செலுத்த வேண்டும். உரங்கள் விலையை முறைப்படுத்தவும், தட்டுப்பாடு இல்லாமல், அவை கிடைக்கவும், மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Jan-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee