திருவாரூர் மாவட்டத்தில் விவசாய வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்ட பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடியை தொடர்ந்து சம்பா தாளடி சாகுபடி வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
அதில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு மற்றும் வாய்கால்களில் தண்ணீர் தடையின்றி வருவதாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் சம்பா தாளடி சாகுபடி வேலைகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
வலங்கைமான் பகுதியில் முன்னதாக 5,600 ஹெக்டேர் முன்பட்ட குருவை சாகுபடி நடைபெற்றதை தொடர்ந்து தற்பொழுது சம்பா, தாளடி சாகுபடி 14,500 ஹெக்டேர் அளவிற்கு நடைபெற்றுவருகிறது.
உழுது தயார்நிலையில் உள்ள நிலங்களில், விவசாயிகள் நாற்றாங்காலிளிருந்து நாற்றுப்பரித்து, கட்டுகட்டி வயல்களுக்கு எடுத்து செல்கின்றனர். பிறகு வயல்களில் பட்டம்கட்டி பெண்கள் நாற்று நடவில் ஈடுப்பட்டு வருகின்றனர்.