Trending News

ஆன்லைன் பொருள் கொள்முதல் மூலம் ரூ. 7500 கோடி சேமித்து மத்திய அரசு சாதனை......

ஒவ்வொரு பொருளையும் தனித் தனி விற்பனையாளர்களிடத்தில் இருந்து வாங்குவதற்கு பதிலாக எல்லாப் பொருட்களையும் தன்னிடத்தில் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களிடத்தில் இருந்து வாங்குவதன் மூலம் நிர்வாக செலவீனங்களை குறைத்து சேமிப்பை உறுதி படுத்த முடியும் என்பதே பிரதமரின் இந்த யோசனைக்கு காரணமாக இருந்தது. பிரதமரின் இந்த யோசனையின் மூலம் இந்திய அரசு தற்போது ஆன்லைன் வழி பொருட்கள் வாங்குதல் வாயிலாக (100 கோடி டாலர்) இந்திய மதிப்பில் 7,500 கோடி ரூபாய் சேமித்து இருக்கிறது.

பொதுவாக இந்தியாவில்  அரசுத்துறைகளுக்கு தேவையான பொருட்களை அரசு நேரடியாக கடைகளில் இருந்து பொது கொள்முதல் செய்வது தான் வழக்கம். இதற்காக  நாட்டின் ஜி.டி.பி'யில் இருந்து 18 சதவீதத்தை மத்திய அரசு  செலவிடுகிறது. இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு வரை மத்திய அரசு அரசுத்துறைகளுக்கு தேவையான நாற்காலிகள், மேஜைகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் பொது கொள்முதல் முறையின் மூலமே வாங்கி வந்தது. 

ஆனால், இந்த முறையின் மூலம் அரசுக்கு கணிசமான செலவீனங்கள் ஏற்படுகிறது என்பதனை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மேலை நாடுகளில் பின்பற்றப்படும் ஆன்லைன் வழி பொருள் கொள்முதல் முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்த விரும்பினார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னிறுத்தியே இந்த யோசனையையும் பிரதமர் வைத்திருந்தார்.


அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல மேலைநாடுகள் தங்கள் பொது சேவை நிறுவனங்களின் தேவைக்கும், அரசின் நிர்வாகத் தேவைக்கும் ஆன்லைன் முறையில் பொருட்களை கொள்முதல் செய்து செலவீனங்களை வெற்றிகரமாக குறைத்து வந்ததை கவனித்த பிரதமர் இந்தியாவிலும் அத்தகைய கொள்முதல் முறையை நடைமுறைப்படுத்த முடிவெடுத்தார். அதன் படி, சிறப்பு குழு ஒன்றினை அமைத்து பல பகுப்பாய்வுகள் மேற்கொண்டு, ஆன்லைன் வழி பொருட்க்  கொள்முதலை டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் ஒன்றிணைத்தார்.


ஒவ்வொரு பொருளையும் தனித் தனி விற்பனையாளர்களிடத்தில் இருந்து வாங்குவதற்கு பதிலாக எல்லாப் பொருட்களையும் தன்னிடத்தில் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களிடத்தில் இருந்து வாங்குவதன் மூலம் நிர்வாக செலவீனங்களை குறைத்து சேமிப்பை உறுதி படுத்த முடியும் என்பதே பிரதமரின் இந்த யோசனைக்கு காரணமாக இருந்தது.


பிரதமரின் இந்த யோசனையின் மூலம் இந்திய அரசு  தற்போது ஆன்லைன் வழி பொருட்கள் வாங்குதல் வாயிலாக (100 கோடி டாலர்) இந்திய மதிப்பில் 7,500 கோடி ரூபாய் சேமித்து இருக்கிறது.


அரசுத்துறை நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும், நிர்வாக தேவைகளுக்காகவும் நாற்காலிகள், மேஜைகள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு நாட்டின் ஜி.டி.பி'யில் இருந்து 18 சதவீதம் ஒதுக்கப்பட்டாலும், அந்த 18 சதவீதத்தில் கால் பங்கு அளவு மட்டுமே ஆன்லைன் வழி பொருள் கொள்முதலுக்காக செலவிடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ஆன்லைன் வழி கொள்முதலுக்கு இது வரை 350 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அளவு இன்னும் மூன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளில் 10,000 கோடி அமெரிக்க டாலர்கள் வரை எட்டும் என்று பிரபல தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் மத்திய அரசின் அதிகாரி குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.


வழக்கமாக இத்தைகைய பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதைக் காட்டிலும் இணைய வழி ஆன்லைன் நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதன் மூலம் நாட்டின் சுகாதாரத்துறைக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.


மத்திய அரசின் இந்த இணைய வழி கொள்முதலுக்கு பெரும்பாலும் அமேசான் நிறுவனமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை பொருட்களை வாங்கும் போதும் சேமிக்கப்பட்டு வந்த சிறிய தொகை  தான் இன்று 100 கோடியாகி இருக்கிறது. மத்திய அரசின் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் வழியாக குறைந்த விலைக்கு வாங்கியதன் மூலமாகவே இவ்வளவு பெரிய தொகை சேமிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.


கொரோனா பேரிடர் காரணமாக ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்து போயிருக்கும் நேரத்தில் நோய்த்தொற்று காரணமாக இந்தியா சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஏதுவாக இந்த சேமிப்பு தொகையை மத்திய அரசு தற்போது பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.


மேலும், பிரதமரின் இந்த முயற்சியின் காரணமாக சீனாவின் சந்தைப் பொருட்கள் முற்றிலுமாக தவிர்க்கப் பட்டு இந்திய சந்தையின் வளர்ச்சி தற்போது உறுதிப்  படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வழி வர்த்தகத்தின் மூலமாக பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும், எந்த நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சப்ளை செய்யப்படுகின்றது என்பது முறையாக உறுதிப்படுத்தப் பட்ட பின்னரே கொள்முதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவை வளர்ந்த மேலைநாடுகளின் அளவுக்கு எல்லா வகையிலும் தரம் உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி நடைமுறைப்படுத்தி வரும் நவீன திட்டங்கள் நாட்டு மக்களுக்கு பல வகைகளில் நன்மை பயிற்று வருகின்றன.


டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா, மேக்-இன் இந்தியா வரிசையில் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அச்சாரமிட்டிருக்கிறது பிரதமரின் இந்த "ஆன்லைன்-வழி கொள்முதல்".

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate