விவசாயம்

மரவள்ளிக் கிழங்கு பயிருக்கு நுண்ணீர் பாசனம் தோட்டக்கலை துறை தீவிரம்..

நேரடி உணவு பொருளாக மட்டுமின்றி, தொழிற்சாலைகள் வாயிலாக, பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கும் பயன்படும் மரவள்ளி கிழங்கு பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் கைகொடுப்பதால், அவற்றை சிறு, குறு விவசாயிகளுக்கு, இலவசமாக அமைத்து தருவதற்கான பணிகளை, தோட்டக்கலை துறை விரைவுபடுத்தியுள்ளது.

மரவள்ளி கிழங்கு நேரடி உணவு பொருளாக மட்டுமின்றி, தொழிற்சாலைகள் வாயிலாக, பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கும் பயன்படுகிறது. 

இவற்றை சாகுபடி செய்தால், அதிக வருவாய் கிடைக்கும்.சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே, மரவள்ளி கிழங்கு அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.


நீர் பற்றாக்குறை காரணமாக, இப்பயிர்களை சாகுபடி செய்ய, பல மாவட்ட விவசாயிகள் தயங்கினர். எனவே, மரவள்ளி கிழங்கு பயிர்களுக்கு, நுண்ணீர் பாசன கட்டமைப்புகளை அமைத்து தரும் பணியில், தோட்டக்கலை துறை இறங்கியது. 

இதையடுத்து, பெரம்பலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மரவள்ளியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதுவரை, 336 கோடி ரூபாய் செலவில், மொத்தமாக, 1.28 லட்சம் ஏக்கர் மரவள்ளி பயிர்களுக்கு, நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைத்து தரப்பட்டு உள்ளன.


நுண்ணீர் பாசனம் அமைத்ததால், பாசனநீர் தேவை, உரத்தின் பயன்பாடு குறைந்து உள்ளதோடு, அதிக மகசூல் கிடைக்க துவங்கி உள்ளது. மரவள்ளி சாகுபடி சீசன் இல்லாத நேரத்தில், காய்கறிகள், கொத்துமல்லி, புதினா, கீரைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருவாய் ஈட்ட துவங்கி உள்ளனர்.


எனவே, மரவள்ளி பயிர்களுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தை தீவிரப்படுத்த, வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் உத்தர விட்டு உள்ளனர். ஆர்வமுள்ள விவசாயிகள் தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate