அரசியல்

“அதிமுகவில் விரிசல் ஏற்படுமா என்று நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அதிமுக செயற்குழு கூட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களது காலத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் காலத்திலும் அதிமுக செயற்குழு கூட்டம் எவ்வாறு நடந்ததோ, அதே முறையில் தான் தற்போதும் செயற்குழு கூட்டம் நடைபெறும். மேலும், அதிமுகவில் விரிசல் ஏற்படுமா என்று நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது” என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திரு.வி.க நகர் மண்டலத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு, கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகளை வழங்கினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அதிமுக செயற்குழு கூட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களது காலத்திலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் காலத்திலும் அதிமுக செயற்குழு கூட்டம் எவ்வாறு நடந்ததோ, அதே முறையில் தான் தற்போதும் செயற்குழு கூட்டம் நடைபெறும்.

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மிக சரியான புரிதலோடு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திச் செல்கிறார்கள். எனவே அதிமுகவில் இடைவெளி ஏற்படுமா? அந்த இடைவெளி வழியே நாம் கோட்டைக்கு போக முடியுமா? என்று நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது” என்று அவர் கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate