Just In

முதல்வர் எடப்பாடி தொடங்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் வரை......தி.மு.க.வின் ஆன்லைன் அட்மிஷன் அட்ராசிட்டிஸ்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல்கட்சிகள் இப்போதிலிருந்தே தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்றை காரணம் காட்டி ஆன்லைன் வழியே உறுப்பினர்களை திரட்டிக் கொண்டிருக்கும் தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கை லட்சணத்தை பார்த்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேலிகிண்டலடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல்கட்சிகள் இப்போதிலிருந்தே தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு என தேர்தலுக்கு முனைப்புடன் தயாராகி வரும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில, மேடையில் துண்டு சீட்டை வைத்து உளறி விட்டு உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்திருக்கிறார் திராவிட கழகத்தின் விடிவெள்ளி ஸ்டாலின். கொரோனா நோய்த்தொற்றை காரணம் காட்டி ஆன்லைன் வழியே உறுப்பினர்களை திரட்டிக் கொண்டிருக்கும் தி.மு.க.வின்  உறுப்பினர் சேர்க்கை லட்சணத்தை பார்த்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேலிகிண்டலடித்து வருகின்றனர்.

தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருந்த தருணத்தில், சூனா பானா என்ற வடிவேலு கதாபாத்திரத்துக்கு இ-பாஸ் வழங்கப்பட்டதாக கூறி, தமிழக அரசை தரம்தாழ்ந்து விமர்சித்த திராவிட உடன்பிறப்புகளின் கட்சி ஐ.டி விங் லட்சணம் தற்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.
ஒரு ஆளுக்கு  நான்கைந்து உறுப்பினர் அட்டை, இல்லாத ஆளுக்கு அடையாள ஆட்டை என பொய் கணக்கு காட்டி ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் உறுப்பினர்கள் இணைந்து வருவதாக பீலா விட்டு வந்த திராவிட கட்சியினர் உள்ளூர் காரரான முதல்வர் எடப்பாடிக்கும், வெளியூர் காரர் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு ஆன்லைன் வழியே அடையாள அட்டை வழங்கியுள்ள சம்பவம் இந்த வாரத்துக்கான பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அதிமுகவின் அடையாளமான எடப்பாடி பழனிசாமிக்கே அடையாள அட்டை வழங்கி கௌரவித்திருக்கும் தி.மு.க'வின் எல்லோரும் நம்முடன் திட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுப்பினராக இணைந்துள்ளது தான் ஆகப்பெரிய கூத்து. அமெரிக்காவின் குடிமகனான அதிபர் டிரம்ப்பை எழும்பூர் தொகுதியின் அடிமட்ட தொண்டனாக அடையாளம் காட்டிய பெருமை ஸ்டாலினின் திராவிடக் கட்சிக்கே சேரும்.

அந்த வரிசையில், அதைவிட உச்சகட்டமாக மற்றொரு அடையாள அட்டையில் ‘விவரமறியா வாரிசு’ என்ற பெயரிலும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவரது தந்தையின் பெயர் மலிவு அரசியல் மன்னர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேடைக்கு மேடை ஒன்றிணைவோம் வா, நமக்கு நாமே, எல்லோரும் நம்முடன் என பிரசாந்த் கிஷோர் குழு எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்ட்டை திக்கி திணறி ஒப்பித்து சமாளிக்கும் தலைவர் ஸ்டாலின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் சொதப்பியது தான் ஏன் என்று தெரியவில்லை எனக்கூறி குமுறி வருகின்றனர் அக்கட்சியின் கலைஞர் கால விசுவாசிகள்.


தி.மு.கவின் இந்த ஆன்லைன் உறுப்பினர் அட்டை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இதுதான் உங்களின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையா..? என நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் மிஞ்சும் அளவிற்கும், பிராமணர்களை இழிவுப்படுத்தும் விதமாகவும் தி.மு.க.வினர் செய்துள்ள செயல் தற்போது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ஆங்கில நாளிதழ் ஒன்றில் காணவில்லை என்ற அறிவிப்புடன் இளம்பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சென்னையின் மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மகள் காயத்ரி காணாமல் போய் விட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. மேலும், உயரமான, நல்ல அழகான 21 வயதுடைய மகளை காணவில்லை என்றும், அனைவரும் வருத்தத்தில் இருக்கிறோம், வீட்டிற்கு வந்து விடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


மேலும், அந்த விளம்பரத்தில்  உன்னுடைய இரண்டு கோரிக்கைகளையும் குடும்பத்தினராகிய நாங்கள் ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், ஒன்று… உனக்கு பிடித்த வேலையை நீ செய்யலாம் என்றும், … 'எல்லோரும் நம்முடன்' என்னும் திட்டத்தின் மூலம் நமது குடும்பம் தி.மு.க.வில் இணை வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறி விட்டது என தெரிவித்துள்ளனர். நாம் மட்டுமில்லாமல், அத்திம்பேர், மண்ணி குடும்பமும் தி.மு.க.வில் இணைந்து விட்டனர், எனவே சீக்கிரம் திரும்பி வா எனக் கூறி, தொடர்பு கொள்ள வேண்டிய இமெயில் முகவரியில் பார்த்தா முன்னாள் சங்கி எனக் குறிப்பிட்டு, பிராமணர்களை இழிவு படுத்தும் விதமான செய்தியை தி.மு.க.வினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்து மதத்திற்கு எதிரான கட்சியல்ல என அடிக்கடி மார்தட்டி வரும் தி.மு.க. ஸ்டாலின் பிறரது மதத்தையும், சமூகத்தையும் இழிவுபடுத்தி பார்க்கும் கட்சி தொண்டர்களை கண்டிக்காமல், ஊக்கப்படுத்தி வருகின்றாரா ? என்று பலரும் ஸ்டாலினை காட்டமாக விமர்சித்து வரும் நிலையில், காணவில்லை என்று பொய் விளம்பரம் செய்யப்பட்ட அனகா என்ற இளம்பெண்  தனது முகநூல் பக்கத்தில் அந்த விளம்பரம் குறித்த தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

அதில் "என் புகைப்படத்தை சிலர் அரசியல் லாபத்திற்காக தவறாக பயன்படுத்தி தமிழ்நாட்டின் ஆங்கில நாளிதழ் ஒன்றில் நான் காணாமல் போய்  விட்டதாக விளம்பரம் செய்துள்ளனர். என்னுடைய அனுமதியில்லாமல் என் புகைப்படத்தை ஒரு நாளிதழில் விளம்பரம் செய்துள்ளதை நான் அப்படியே கடந்து போய்விட போவதில்லை. பார்த்தசாரதி என்ற பெயரில் இப்படி ஒரு கேவலமான வேலையை பார்த்துள்ள நபரை நான் சட்ட ரீதியாக சந்திக்க போகிறேன்" என்று கூறியுள்ளார்.

தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று குட்டிக்  கரணம் போட்டு, பகல் கனவு கண்டு வரும் ஸ்டாலினுக்கு யாரும் வெளியில் இருந்து சூனியம் வைக்க வேண்டிய அவசியமில்லை, அவர் கட்சி உடன்பிறப்புகளே தங்களால் முடிந்த அளவுக்கு அதை சிறப்பாக செய்து வருகின்றனர், என்பதே தமிழக மக்களின் மைண்ட் வாய்சாக இருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தற்கே, எடப்பாடி டொனால்டு டிரம்ப் என இத்தனை பிரபலங்கள் தி.மு.க'வில் இருக்கிறார்கள் என்றால் அலசி ஆராய்ந்து பார்த்தால் இன்னும் எத்தனை தலைவர்கள் ஸ்டாலினின்  உடன்பிறப்புகளாக லிஸ்டில் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். 


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee