அரசியல்

"இணையவழி உறுப்பினர் சேர்க்கை மூலம் திமுக மக்களை ஏமாற்றுகிறது" - அமைச்சர் ஜெயக்குமார்

இணையவழி உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் திமுக அவர்களின் ஆட்களை வைத்து ஏமாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தால் தான் அது உண்மை என்றும் மாறாக இணைய வழியில் உறுப்பினர்களை சேர்க்கிறோம் என்ற பெயரில் திமுக அவர்களின் ஆட்களை வைத்து ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை திருவொற்றியூர் சீனிவாசபுரம் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இணைய வழி உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் மக்களை திமுக ஏமாற்றுவதாக தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், திமுக சார்பில் அந்த கட்சிக்கான உறுப்பினர்களை இணைய வழி மூலமாக சேர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை  சேர்த்தால் தான் அது உண்மை என்றும் மாறாக இணைய வழியில் உறுப்பினர்களை சேர்க்கிறோம் என்ற பெயரில் திமுக அவர்களின் ஆட்களை வைத்து ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate