தொழில்நுட்பம்

ரகசியங்களைப் பாதுகாக்கும் Alt Z life தொழில்நுட்பத்துடன் கூடிய சாம்சங் மொபைல்கள் அறிமுகம்..!

நவீன அம்சங்கள் நிறைந்த சாம்சங் Galaxy A51 மற்றும் A71 ஸ்மார்ட் போன்களில் ரகசியங்களைப் பாதுகாக்கும் Alt Z life தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும், இந்த ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான கேஷ்பேக் சலுகைகளுடன் கிடைக்கிறது எனவும் சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்மார்ட்போன் பயன்பாடு:

ஸ்மார்ட்போன் என்பது நமது வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியாகவே மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஸ்மார்ட்போன் இல்லை என்றால் நாம் இல்லை எனும் அளவுக்கு நிலைமை உள்ளது. வேலையாக இருந்தாலும் சரி, பொழுதுபோக்கு விஷயங்களாக இருந்தாலும் சரி எல்லா விஷயங்களும் பாதுகாக்கப்படும் முக்கிய இடமாகவே ஸ்மார்ட்போன் மாறியிருக்கிறது. அதில் பிரைவசி என்பது மிக முக்கியத்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு பத்திரிகையாளர் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் பணி விஷயமாக ஏராளமான படங்களை குறிப்பாக சில முக்கியமான படங்களை ரகசியமாக பாதுகாக்கவேண்டியது இருக்கும். அதுபோல சமயங்களில் நமது போனை யாராவது பயன்படுத்தி அந்த ரகசியமான புகைப்படங்களை பார்த்து விடுவார்களா? ரகசியமாக பாதுகாக்கப்பட்ட விஷயம் தெரியவந்துவிடுமா? என்ற சந்தேகமும், பயமும் எழுவது சகஜம் தானே... அதுதான் பிரைவசி பற்றி பயம்.

பிரைவசி பயம்:

பிரைவசி என்பது வெளிநபர்களிடம் தகவல் தராமல் இருப்பது அல்ல, பாதுகாப்பதும் தான். நாம் சேகரிக்கும் தகவல்கள் நமக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்று நினைப்போம். நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து சில தகவல்களை ரகசியமாக பாதுகாக்க விரும்புவோம். அப்படிப்பட்ட தகவல்களை செல்போனில் ரகசியமாக வைத்திருப்போம். எனவே எதிர்பாராத நேரங்களில் நமது செல்போன்களை பிறரிடம் கொடுக்க நிச்சயம் தயங்குவோம். அப்படி ஒருவேளைை செல்போன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், நாம் ரகசியமாக பாதுகாக்கும் சில தகவல்களை அவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று மிகவும் கவலைப் படுவோம்.

ஆனால் இந்தக் கவலையைப் போக்கும் விதத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிலேயே ஒரு புதிய புரட்சியை சாம்சங் நிறுவனம் புகுத்தி இருக்கிறது.

சாம்சங் Galaxy A51, A71:

Quick switch மற்றும் Content suggestions என்ற புதுவித யுத்திகள் சாம்சங்கின் Galaxy A51 மற்றும் Galaxy A71 என்ற ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் உலகில் நமது பிரைவசியை பயமில்லாமல் பாதுகாக்க உதவும் Alt Z life எனும் மேம்பட்ட அம்சத்தை சாம்சங் நிறுவனம் கையாண்டு இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சாம்சங் நிறுவனம் இந்த புதுமையான அம்சத்தை ஸ்மார்ட்போன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்களது செல்போன்களில் எந்தவிதமான ரகசியமான தகவல்களையும் பாதுகாப்பாக வைத்து இருக்கலாம். எந்தவித தயக்கமும், சங்கடமும் இல்லாமல் செல்போனை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கொடுக்கலாம். 
Alt Z life எனும் மேம்பட்ட அம்சமானது நமது தகவல்களை எந்த சூழ்நிலையிலும் யாரும் பார்க்க முடியாத வகையில் பாதுகாக்கிறது. எனவே நாம் தயக்கமில்லாமல் முழு சுதந்திரமாக நமது தகவல்களை செல்போனில் பத்திரமாக வைத்திருக்கலாம். மற்றவரிடம் செல்போனை கொடுக்க தயக்கம் இனி இருக்காது. அந்தளவு நமது பிரைவசி பாதுகாக்கப்படுகிறது.

Quick switch:

Quick switch என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். திடீரென நமது செல்போனை யாராவது கேட்டால் power switch-ஐ 2 தடவை press செய்து விடலாம். உடனடியாக private mode-ல் இருந்து general mode-க்கு செல்போன் மாறிவிடும். உதாரணமாக நீங்கள் அலுவலகத்தில் சக நண்பர்களுடன் செல்போனில் மீம்ஸ் பார்த்து அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திடீரென அலுவலகம் மேனேஜர் வந்து செல்போனை கேட்கிறார். அந்த நொடி தயங்காமல் power switch-ஐ இரண்டு முறை தட்டி விட்டுக் கொடுத்தால் போதும். உடனடியாக தொழில் நுட்பங்கள் சார்ந்த ஏதாவது விஷயங்கள் திரையில் தோன்றி விடும். இதுபோலவே நண்பர்கள், காதலருடன் பேசிக்கொண்டிருக்கும் போது யாராவது செல்போன் கேட்கும் பட்சத்தில் Quick switch அம்சத்தை பயன்படுத்தினால் போதும், நமது உறவினர்களுடன் நாம் பேசிய பதிவு தோன்றும். இப்படி நமது நடவடிக்கைகளை பிறர் அறியாத வண்ணம் நாம் நேர்த்தியாக சந்தேகம் வராமல் பாதுகாக்க முடியும்.

Content suggestions:

தொழில்துறையில் தனித்துவமான கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற சாம்சங் நிறுவனம், இந்த முறையும் Quick switch option மூலம் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. விவேகமான, தடையற்ற, நேர்த்தியான சேவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. இந்த புதுவித யுத்திகள் சாம்சங்கின் Galaxy A51 மற்றும் Galaxy A71 என்ற ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. Alt Z life எனும் மேம்பட்ட அம்சமானது வேறு எந்த ஸ்மார்ட் போனிலும் கிடைக்காத புதிய உத்வேகத்தை காணச் செய்கிறது.
அதேபோல Content suggestions என்பது முக்கியமான சிறப்பம்சமாகும். இது ஸ்மார்ட் போனில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஸ்கேன் செய்யும். Seen detection மற்றும் face detection என்று ஸ்கேன் செய்தலும் இரு வகைப்படும். Seen detection என்பது பிரைவசிக்கு உரிய வாய்ப்புகள் இருக்கும் புகைப்படங்களை அதுவே தெரியப்படுத்தும். Face detection-ல் நாம் ஒரு நபரின் புகைப்படத்தை குறிப்பிட்டால் போதும், செல்போனில் அந்த அந்த நபரின் அனைத்து புகைப்படங்களும் அடுத்த நொடியே ஸ்கேன் செய்யப்பட்டு தனி folder-க்கு சென்றுவிடும். இதுதவிர Galary-ல் இருந்து தேவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாமே தேர்வு செய்தும் secure folder-க்கு அனுப்ப முடியும்.

நியாயமான விலையில்.:

சாம்சங் நிறுவனம் மீண்டுமொரு தரமான ஸ்மார்ட்போன் படைப்பை நியாயமான விலையில் வழங்கி இருக்கிறது. Samsung Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்களில் Infinity-O sAMOLED Plus display, sleek Prism Crush design, quad-camera module, and flagship camera features, such as Single Take and Night Hyperlapse எனும் மேம்பட்ட வசதிகள் இருக்கின்றன. Single take வசதி மூலம் 10 வினாடிகளுக்குள் 10 புகைப்படங்கள் மற்றும் 4 வீடியோக்கள் எடுக்க முடியும். Stylise image, short movie, GIF animation ஆகியவையும் இதில் அடங்கும். Night hyperlapse மூலம் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான தரமான படங்களை எடுக்க முடியும். இதனால் இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது வேண்டிய, விரும்பிய வீடியோக்களை அழகாக எடுத்து தெளிவாக பார்த்து ரசிக்கலாம். எந்த காட்சியையும் எடுத்து பார்த்து மகிழலாம்.

சிறப்பு அம்சங்கள்:

Samsung Galaxy A71 ஸ்மார்ட்போன் பேட்டரி 4,500mAh திறன் கொண்டது. ஒருநாள் தாண்டியும் செல்போன் பேட்டரி சார்ஜ் அப்படியே இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... இதனால் நண்பர்களுடன் மணிக்கணக்காக அரட்டை அடிக்கலாம். விரும்பும் விளையாட்டுக்களை தடையின்றி விளையாடி மகிழலாம். 64 MP back camera, 25w wired charging, 6.7 inch AMOLED display என அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கிறது.
Samsung Galaxy A71 போலவே Samsung Galaxy A51 ஸ்மார்ட்போனும் வடிவமைப்பில் ஒத்தவை. 6.5-inch AMOLED screen, 48MP camera, 4,000mAh battery with 15W fast charging மற்றும் One UI 2.0 out of the box என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உண்டு.

கேஷ்பேக் சலுகை:

பாதுகாப்பு அம்சத்தில் தனித்துவ தன்மைகளைக் கொண்ட சாம்சங் நிறுவனம் இன்னும் ஒருபடி மேலே சென்று பாதுகாப்பு உறவுகளை கையாள Knox எனும் மேம்பட்ட அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஸ்மார்ட் போனில் hardware chip-ல் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரகசிய டேட்டாக்கள், ரகசியமான கோப்புகள், பண பரிவர்த்தனை விவரங்கள், பாஸ்வேர்டுகள், புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவை பாதுகாக்கப்படுவதுடன், ஸ்மார்ட் போனின் பாதுகாப்பு தளத்தையும் மேம்படுத்துவதை அமைகிறது.

சாம்சங் Galaxy A51 மற்றும் Galaxy A71 ஸ்மார்ட்போன்களை ஆன்லைன் மூலமாகவோ கடைகளிலோ அல்லது Samsung.com இன்று இணையதளம் மூலமாகவோ வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும் அட்டகாசமான கேஷ்பேக் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி Galaxy A71 ஸ்மார்ட்போனில் ரூ.2,600 வரையிலும், Galaxy A51 ஸ்மார்ட்போனில் ரூ.1,600 வரையிலும் கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது என சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate