ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனசேவை!!!

பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் ஆன இன்று கொரோனா காரணமாக வழக்கமாக நடைபெற வேண்டிய தேரோட்டத்திற்கு பதில் காலை 8 மணி 9 மணி வரை சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்த பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் காலை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போதைய நிலையில் தேரோட்டம் நடத்த அனுமதி இல்லை.
எனவே பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளாக இன்று தேரோட்டத்திற்கு மாற்றாக சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் ஆன இன்று  கொரோனா காரணமாக வழக்கமாக நடைபெற வேண்டிய தேரோட்டத்திற்கு பதில் காலை 8 மணி 9 மணி வரை சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.

இதன் மூலம் அகில உலகங்களையும் ஆட்சி செய்யும் சர்வ பூ பாலகர் ஆன ஏழுமலையானை இந்த உலகில் இருக்கும் அனைத்து அரசர்களும் (சர்வபூபாலகர்கள்) சாமி வாகனமாக மாறி தங்கள் தோளில் சுமந்து உற்சவம் நடத்துவதாக ஐதீகம். இன்று காலை சர்வ திருவாபரண அலங்காரத்துடன் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு தீப தூப நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்த சம்பிரதாய ரீதியான கைங்கரியங்களுடன் ஏழுமலையானின் சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate