உலகம்

கொரோனா வைரஸ் இயற்கையாகவே தோன்றியது - மீண்டும் வலியுறுத்தும் உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.

ஜெனீவா:-

உலக சுகாதார அமைப்பு தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:-

உலக சுகாதார அமைப்பு அறிவியல் மற்றும் சான்றுகளை நம்புகிறது. அதனால்தான் அறிவியல், தீர்வுகள் மற்றும் ஒற்றுமை என்று நாங்கள் கூறுகிறோம்.

கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து வந்தது என்று யாரோ ஒருவர் சொன்னார் என்று இந்தியாவில் இருந்து எங்கள் சக ஊழியர் கேட்டார். ஆனால் எங்களைப் பொருத்தவரை, இதுவரை நாம் பார்த்த அனைத்து வெளியீடுகளும், வைரஸ் இயற்கையாகவே தோன்றியது என்று கூறுகின்றன என கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் கொரோனா நடவடிக்கையின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறும் போது

முந்தைய ஆய்வுகளின் படி கொரோனா விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது. அவை தோன்றிய விலங்கு மற்றும் அதை மனிதர்களுக்கு பரப்பியதை எப்படி என அடையாளம் காண குறிப்பிட்ட நேரம் மற்றும் மிகவும் விரிவான விசாரணைகள் தேவை.

அது தோன்றிய விலங்கு மற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கடத்தியது எப்படி என்று தெரியவில்லை என்றால், அது மீண்டும் மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate