உலகம்

உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்வு!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த கொரோனா தொற்று இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தொடர்ந்து இந்தியா நீடிக்கிறது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,30,40,716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெனீவா:-

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த கொரோனா தொற்று இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தொடர்ந்து இந்தியா நீடிக்கிறது.


இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,30,40,716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,43,94,484 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 98 ஆயிரத்து 171 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 76 லட்சத்து 48 ஆயிரத்து 061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 371 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

  • அமெரிக்கா       -  பாதிப்பு - 72,87,521, உயிரிழப்பு - 2,09,177, குணமடைந்தோர் - 45,24,108
  • இந்தியா       -    பாதிப்பு - 59,90,513, உயிரிழப்பு -   94,533, குணமடைந்தோர் - 49,38,641
  • பிரேசில்       -    பாதிப்பு - 47,18,115, உயிரிழப்பு - 1,41,441, குணமடைந்தோர் -  40,50,837
  • ரஷியா        -    பாதிப்பு - 11,43,571, உயிரிழப்பு -   20,225, குணமடைந்தோர்  - 9,40,150
  • கொலம்பியா  -     பாதிப்பு -  8,06,038, உயிரிழப்பு -   25,296, குணமடைந்தோர்  - 7,00,112

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate