லைப் ஸ்டைல்

தொப்பை குறைய, இருமல் குணமாக பட்டை மிளகு டீ

tதொப்பை குறைய, இருமல் குணமாக இந்த பட்டை மிளகு டீயை குடிக்கலாம். இடுப்பு, கால், கழுத்து பகுதிகளில் இருக்கும் வலி குறையும். இதனை பால் கொடுக்கும் தாய்மார்களும் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு பிறகு குடிக்கலாம். நீரழிவு நோயாளிகளும் இதனை குடிக்கலாம்.

இயற்கை முறையிலேயே எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தொப்பையை குறைக்க உதவும் டீ எப்படி தயாரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


தேவையான பொருள்கள் :

  • தண்ணீர் - 250 மில்லி
  •  பட்டை - ஒரு துண்டு
  • மிளகு - 10
  • மஞ்சள் - சிறிதளவு
  • இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை:

250 மில்லி தண்ணீர் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள். அதன் பின் எடுத்து வைத்திருக்கும் மிளகை இடித்து தண்ணீரில் போடுங்கள்.

அதன்பின் சிறிதளவு பட்டையை இந்த தண்ணீரில் பொடித்து போடுங்கள்.

இவற்றை தண்ணீரில் போட்டு சிறு தீயில் வைத்து தண்ணீரை கொதிக்க விடுங்கள்.

அதன் பின் மஞ்சள் தூளை எடுத்து நன்கு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் போடுங்கள்.

இந்த மஞ்சளை தண்ணீரில் போட்ட பிறகு ஒரு சிறு துண்டு இஞ்சி எடுத்து நீங்கள் இந்த டீயை குடிக்க இருக்கும் டம்ளரில் சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள்.

அதன்பின் கொதிக்க வைத்த தண்ணீரை இந்த டம்ளரில் ஊற்றி விட்டு பத்து நிமிடம் களித்து இந்த தண்ணீரை அருந்துங்கள்.

இதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். அப்படி முடியாதவர்கள் இரவு தூங்க செல்லும் முன் கூட அருந்தலாம்.

அதுமட்டுமல்லாமல் இடுப்பு, கால், கழுத்து பகுதிகளில் இருக்கும் வலி குறையும். இதனை பால் கொடுக்கும் தாய்மார்களும் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு பிறகு குடிக்கலாம். நீரழிவு நோயாளிகளும் இதனை குடிக்கலாம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate