இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (செப்டம்பர் 27) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 82. ஜஸ்வந்த் சிங் காலமான செய்தியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். 1938, ஜனவரி 3ம் தேதி பிறந்த ஜஸ்வந்த் சிங் இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியாக இருந்தார். அவர் பாரதிய ஜனதாவின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (செப்டம்பர் 27) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 82. ஜஸ்வந்த் சிங் காலமான செய்தியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

1938, ஜனவரி 3ம் தேதி பிறந்த ஜஸ்வந்த் சிங் இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியாக இருந்தார். அவர் பாரதிய ஜனதாவின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக திகழ்ந்தார். மேலும், அவர் 1980 முதல் 2014 வரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். 

ராஜஸ்தானில் பாஜகவை வலுப்படுத்துவதில் அவரின் பங்கு மிக முக்கியமானதாகும். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி என ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடியும் ஜஸ்வந்த் சிங்கின் மரணம் குறித்து வருத்தத்தைத் தெரிவித்ததோடு, "ஜஸ்வந்த் சிங் ஜி நம் தேசத்திற்கான அரும் பணியாற்றினார், முதலில் ஒரு ராணுவ வீரராகவும் பின்னர் அரசியலிலும் அரும் பணியாற்றியுள்ளார், அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சியில் அவர் முக்கியமான இலாகாக்களைக் கையாண்டார்.  நிதி, பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரத்துறை என அனைத்தையும் சிறப்பாக கையாண்டார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate