தமிழ்நாடு

மண்ணெண்னை விலை உயர்வுக்கு தமிழக அரசு காரணமல்லை : அமைச்சர் செல்லூர் ராஜு

மண்ணெண்ணை விலை உயர்வுக்கு மாநில அரசு காரணமில்லை என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். சென்னை நகர மக்கள் முதல், கிராமங்கள் வரை நகரும் ரேசன் கடைகள் செயல்படுகிறது. மண்ணெண்ணை விலை உயர்வுக்கு மாநில அரசு காரணமில்லை. தமிழகத்தில் யூரியா தட்டுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. கூட்டுறவு துறை மூலம் தட்டுபாடு இல்லாமல் வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை அருகே உள்ள கள்ளந்திரி மதகில் இருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, மேலூர் பகுதி கிராமங்களுக்கான விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது அவர், நடமாடும் ரேசன் கடை மதுரையில் விரைவில் தொடங்கப்படும். இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் விலையில்லா ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது. மலை பகுதிகளில் வாழும் மக்களுக்கு நேரில் சென்று வழங்குகிறோம். 3000 நகரும் ரேசன் கடைகள் இயக்கப்படுகிறது.

சென்னை நகர மக்கள் முதல், கிராமங்கள் வரை நகரும் ரேசன் கடைகள் செயல்படுகிறது. மண்ணெண்ணை விலை உயர்வுக்கு மாநில அரசு காரணமில்லை. மத்திய அரசு தான் காரணம். தமிழகத்தில் யூரியா தட்டுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. கூட்டுறவு துறை மூலம் தட்டுபாடு இல்லாமல் வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate