இந்தியா

விவசாயிகள் வளமாக இருந்தால் தான் தேசம் வலிமையாக இருக்கும்...!

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், ‘மனதின் குரல் ’ என்ற நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். அந்த வகையில், இன்று வானொலி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் காலை 11 மணிக்கு உரையாற்றினார். கொரோனா தொற்று மற்றும் வேளாண் மசோதா போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார்.

பிரதமர் மோடி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் 69-வது முறையாக (செப்டம்பர் 27) ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். காலை, 11 மணிக்கு தொடங்கிய மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் விவசாயிகள் வளமாக இருந்தால் தான் தேசம் வலிமையாக இருக்கும் என்று கூறினார். 

ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பம்சங்களை குறிப்பிட்டு அதை பாதுகாக்க வேண்டிய தன் அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் போற்றுதலுக்குரிய செயல்களை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேசி இருந்தார்.

Image

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்தியாவில் ஆதிகலாசாரங்களில் ஒன்றான கதை சொல்லுதல் குறித்து விவரித்தார் பிரதமர் மோடி. பின்னர் பெங்களூருவில் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடத்தும் குழுவினருடன் கலந்துரையாடினார். 

நாட்டின் விவசாயிகள் தான் மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் முதுகெலும்புகள். விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

தமிழகத்தின் வில்லுப்பாட்டு கலையை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் கதை சொல்லும் கலையில் வில்லுப்பாட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.

Image

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் தற்சார்பு நிலையை எட்டியுள்ளதாக கூறினார்.  காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றி இருந்தால் இந்திய எப்போதோ தற்சார்பு  நிலையை எட்டியிருக்கும் என்றும் நிகழ்ச்சியில் பேசினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate