தமிழ்நாடு

"பண்ணை வீட்டில் எஸ்.பி.பி.க்கு நினைவு மண்டபம்" - எஸ்.பி.பி.சரண் அறிவிப்பு

செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.பி.யின் மகன் சரண், எஸ்.பி.பி.க்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்றும், தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் கட்ட முடிவு செய்துள்ளதாகவும், தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக அமைந்தக்கரையில்  உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 50 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நேற்றைய முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் மற்றும் திரை உலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த எஸ்.பி.பி.யின் பூத உடல் பிறகு சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப் பட்டது.

தாமரைப்பாக்கத்தில் முறையாக இறுதி மத சடங்குகள் செய்யப்பட்டு, தமிழக அரசின் முழு அரசு மரியாதையோடு 72 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. அவரின் இறுதி நிகழ்ச்சியில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.பி.யின் மகன் சரண், எஸ்.பி.பி.க்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்றும், தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் கட்ட முடிவு செய்துள்ளதாகவும், தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

நினைவு மண்டபம் கட்டப்படுவது குறித்து அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்த அவர், எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட போலீசுடன் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate