Just In

" விவசாயிகள் இரட்டிப்பு விலையை பெறுவார்கள்" - அண்ணாமலை

"மத்திய அரசு விவசாயிகளின் நலனை முழுக்க முழுக்க கருத்தில் கொண்டு இந்த வேளாண் மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை விவசாயிகள் தங்கள் விளைப் பொருள்களுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்த மசோதாக்கள் அவர்களுக்கு அளித்துள்ளது. இந்தியாவில் வரும் 2024-ஆம் ஆண்டிற்குள் விவசாயிகள் தங்கள் விளைப் பொருள்களுக்கு இரட்டிப்பு விலையை பெற்று விடுவார்கள்"

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு மத்தியில் இரண்டு அவைகளிலும் மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் எதிர்க்கட்சியினர் மிகவும் அநாகரீகமாக நடத்துக் கொண்டனர். அவர்களின் அநாகரீக நடத்தையை கண்டித்து நாடாளுமன்றத் துணை தலைவர் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவிற்கு நாட்டு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், சில அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபங்களுக்காக விவசாயிகளை இந்த மசோதாக்களுக்கு எதிராக வழிநடத்த தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

விவசாயிகளின் விளைப் பொருள்களுக்கு உரிய விலையை உறுதிப்படுத்தி, விவசாயிகளை தற்சார்பு நிலைக்கு கொண்டு செல்லும் இந்த சட்டங்கள் குறித்த தெளிவான புரிதலை மக்களுக்கு கொண்டு சேர்க்க பாரதிய ஜனதா கட்சியினர் களமிறங்கியுள்ளனர்.

அந்த வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த வேளாண் மசோதாக்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "மத்திய அரசு விவசாயிகளின் நலனை முழுக்க முழுக்க கருத்தில் கொண்டு இந்த வேளாண் மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை விவசாயிகள் தங்கள் விளைப் பொருள்களுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்த மசோதாக்கள் அவர்களுக்கு அளித்துள்ளது. இந்தியாவில் வரும் 2024-ஆம் ஆண்டிற்குள் விவசாயிகள் தங்கள் விளைப் பொருள்களுக்கு  இரட்டிப்பு விலையை பெற்று விடுவார்கள்" என்று பேசினார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate