தமிழ்நாடு

விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை வீடு திரும்புவார் - சுதீஷ்

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதிஷ் தெரிவித்துள்ளார். இதனால், தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் கோரப் பிடிக்கு சமீபகாலமாக திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அந்த வரிசையில் தற்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22-ஆம்  தேதி உறுதி செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதிஷ் தெரிவித்துள்ளார். இதனால், தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate