உலகம்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட வட கொரியாவின் யோங்பியோன் அணு உலை மையம்- தென் கொரியா தகவல்...

அண்மையில் வட கொரியாவின் மேற்கு கடற்கரையில் வீசிய சூறாவளி, மற்றும் வெள்ளத்தால் வடகொரியாவின் அணு உலை பெரும் பாதிப்பை சந்தித்தது. அணு உலை இடத்தைப் பாதுகாக்க ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் வடகொரியாவின் யோங்பியோன் அணு உலை பெருத்த சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பியோங்யாங்:- 

கொரிய தீபகற்பப் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பலத்த புயல் வீசியது. இதன் காரணமாக வடகொரியாவில் உள்ள யோங்பியோன் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் ஆராய்ச்சி மையம் கடும் சேதத்திற்குள்ளானதாக 38 நார்த் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

அந்த அணு உலைக்கு நீரை உட்செலுத்தும் குர்யாங் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த அணையும் புயலால் சேதமானதாகவும்,இதன் காரணமாக நீர் வெறியேறியதால் உலையைக் குளிர்விக்கத் தேவையான இயங்கு சக்தி கிடைக்காமல் அணு உலை மூடப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அணு உலைக்கு நீரை உட்செலுத்தும் குர்யாங் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த அணையும் புயலால் சேதமானதாகவும்,இதன் காரணமாக நீர் வெறியேறியதால் உலையைக் குளிர்விக்கத் தேவையான இயங்கு சக்தி கிடைக்காமல் அணு உலை மூடப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த செயற்கைக் கோள் புகைப்படத்தினையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
இதனிடையே யுரேனியம் செறிவூட்டல் ஆலையில், சூறாவளிக்குப் பிந்தைய பழுது பணிகள் நடைபெறுவதால் பழைய அலகுகளை பழுதுபார்ப்பதற்கும், மாற்றுவதற்கும், மேலும் அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதால் இந்த உலை  மூடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate