உலகம்

சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இடையே கடும் மோதல்: தயார் நிலையில் இருக்க ராணுவத்துக்கு உத்தரவிட்ட அர்மீனியா...

அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகளிடையே நாகோர்னோ-கராபாக் பிராந்தியம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அஜர்பைஜான் இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக ஆர்மீனியா அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்து அஜர்பைஜானுக்கு எதிரான போருக்கு தயாராக இருக்குமாறு தனது படைகளுக்கு ஆர்மீனியா உத்தரவிட்டுள்ளதால் காகேசியன் பிராந்தியத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு அன்றைய சோவியத் யூனியனிடம் இருந்து அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகள் விடுதலை பெற்று தனி நாடானது. அது முதற்கொண்டு அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா நாடுகள் இடையே நாகோர்னோ-கராபாக் பகுதி தொடர்பாக தொடர்ந்து மோதல்கள் நிலவி வந்தது. நாகோர்னோ-கராபாக் பிராந்தியம்  அஜர்பைஜானை சேர்ந்தது என்று கூறினாலும் சர்வதேச நாடுகள் அந்தப் பிராந்தியம் பூர்வகுடி ஆர்மீனியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.Fighting erupts between Armenia, Azerbaijan over disputed region | Asia |  Al Jazeera

இந்நிலையில் நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தின் மீது அஜர்பைஜான் வான் மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தியதாக ஆர்மீனியா கூறியது. மேலும், அஜர்பைஜான் ஆர்மீனியா மீது ஷெல் தாக்குதலும் நடத்தியது.

அஜர்பைஜான் நடத்திய ஷெல் தாக்குதலால் ஆர்மீனியாவைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட இரண்டு பொதுமக்கள் உயிரிழந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே அஜர்பைஜான் மீது ஆர்மீனியா நடத்திய தாக்குதலால் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்ததாகவும் அஜர்பைஜான் தெரிவித்துள்ளது.

இந்த பதற்றமான சூழலில் அஜர்பைஜான் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவது தொடர்பாக இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்து ஒட்டுமொத்த ராணுவத்தையும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் தங்கள் நாட்டு ஆண்கள் அனைவரையும் ராணுவ சேவையில் ஈடுபடும் ஆர்மீனியா உத்தரவிட்டுள்ளது.Armenia

அஜர்பைஜானுடன் நெருக்கமான நாடக உள்ள துருக்கி, காகேசியன் பிராந்தியத்தில் அர்மீனியா அமைதியை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அஜர்பைஜான் மீது அர்மீனிய மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டிக்காமல் சர்வதேச சமூகம் வாய்மூடி மவுனியாக இருப்பதாகவும், இதன் மூலமாக சர்வதேச சமூகத்தின் இரட்டை நிலைப்பாடு வெட்டவெளிச்சமாகி உள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate