Just In

அஜர்பைஜான்-அர்மீனியா மோதல் பின்னணி… மோதலைத் சாதகமாகப் பயன்படுத்தத் துடிக்கிறதா துருக்கி…

முந்தைய சோவியத் யூனியன் நாடுகளான அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளிடையே நகோர்னோ-கரபாக் பிராந்தியம் தொடர்பாக மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலை தொடர்ந்து தன் நாட்டு படைகள் போருக்குத் தயாராகுமாறு அர்மீனியா அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ராணுவ சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. இந்த போரில் அஜர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி குரல் கொடுத்துள்ளது. அஜர்பைஜான்-அர்மீனியா நாடுகளிடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதன் பின்னணி என்ன என்பதை காணலாம்.

ஸ்டெபனகெர்ட்:-

1991 ஆம் ஆண்டு அன்றைய சோவியத் யூனியனிடம் இருந்து அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் பிரிந்து தனி நாடுகளாக மாறியது. அது முதற்கொண்டு இருநாடுகளிடையே நகோர்னோ-கரபாக் பிராந்தியம் தொடர்பான மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. ஏனெனில் காஸ்பியன் கடலில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவை பைப் லைன்கள் மூலமாக சர்வதேச சந்தைக்கு அனுப்பப்படுகிறது.OPEC, Russia approve biggest-ever oil cut to support prices amid  #coronavirus pandemic | MAMUL.am news Agency | News from Armenia and Nagorno -Karabakh

நாகோர்னோ-கராபாக் பிராந்தியம் மற்றும் சுற்றியுள்ள ஏழு மாவட்டங்கள் தான் சர்ச்சைக்குரிய பகுதியாகும். நாகோர்னோ-கராபாக் பிராந்தியம் மோதல் என்பது ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் ஒரு இன மற்றும் பிராந்திய ரீதியிலான மோதலாகும். அர்மீனிய மக்கள் அதிகம் நிறைந்த  நாகோர்னோ-கராபாக் பிராந்தியம் சுயாட்சி நிறைந்த ஆர்ட்சாக் குடியரசால் (Republic of Artsakh) கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் இப்பிராந்தியம் அஜர்பைஜானின் ஒரு பகுதி என்று சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Nagorno Karabakh: the hate speech factor / Nagorno Karabakh / Areas /  Homepage - Osservatorio Balcani e Caucaso Transeuropa

அஜர்பைஜான் ஒரு இஸ்லாமிய நாடாகும். ஆனால் நாகோர்னோ-கராபாக் பிராந்தியம் அர்மீனிய கிறிஸ்தவர்கள் நிறைந்த பிராந்தியம் ஆகும். இந்த இன ரீதியான வேறுபாடுகளும் இரு நாடுகளிடையே உரசல்கள் நிகழ் முக்கிய காரணம் ஆகும்.

நாகோர்னோ-கராபாக் பகுதியை கைப்பற்றுவது தொடர்பாக இரு நாடுகளிடையே 1994ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதல் ரஷ்யாவின் தொடர் அழுத்தம் காரணமாக இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. உண்மையில் 1997 ஆம் ஆண்டு இரு நாடுகளும் தனி நாடுகளாக பிரிவதற்கு முன்பு இருந்தே இந்த பிராந்தியம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல தசாப்தங்களாக மோதல்கள் நிலவி வருகிறது. அஜர்பைஜான்-அர்மீனியா இரண்டும் தனி நாடுகளாக பிரிந்த பிறகு ரஷ்யா பிரான்ஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தலையீட்டால் இரு நாடுகளிடையே போர் ஏற்படாமல் தடுக்கபட்டு வந்தது. எனினும் இரு நாடுகளிடையே இதுவரையில் எந்த விதமான அமைதி ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.Armenia-Azerbaijan war: line of contact

கடந்த 2016ம் ஆண்டு இவ்விரு நாடுகள் இடையே 5 நாள் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் தலையீட்டால் போர் கைவிடப்பட்டது.

அஜர்பைஜான் ஒரு இஸ்லாமிய நாடு என்ற காரணத்தால் துருக்கி அதனுடன் கலாச்சார ரீதியான தொடர்புகளை கொண்டுள்ளது. அதோடு அஜர்பைஜானிலிருந்து கிடைக்கும் எண்ணெய் வளம் காரணமாகவும் அஜர்பைஜானுடன் துருக்கி பொருளாதார ரீதியான தொடர்பு கொண்டுள்ளது.

எண்ணெய் வளமிக்க இப்பகுதியில் நிகழும் போரால் தனது எண்ணெய் சந்தை பாதிக்கப்படும் என்ற காரணத்தால் அஜர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி களம் இறங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தப் பிராந்தியம் தொடர்பாக மீண்டும் அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளிடையே மோதல் முற்றி உள்ளது. 

இதுதொடர்பாக ஆர்மீனிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:-
நகோர்னோ-கரபாக் பிராந்தியத்தின் தலைநகர் ஸ்டெபனகெர்ட் பகுதிகளில் பொது மக்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்ட அஜர்பைஜான் ராணுவத்தைச் சேர்ந்த மூன்று டாங்கிகள், 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் மூன்று ஆளில்லா விமானங்களை அர்மீனிய படைகள் தாக்கி அழித்தது என்று கூறியுள்ளது.

இதனிடையே அர்மீனியா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையை அஜர்பைஜான் மறுத்துள்ளது அதேவேளையில் தங்கள் நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அர்மீனியவின் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளது. 

இதுநாள் வரையில் மேற்குலக நாடுகளை வைத்து சதுரங்கம் ஆடிய உலக நாடுகள் தற்போது காகசியன் நாடுகளை வைத்து தங்கள் ஆட்டத்தை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee