உலகம்

பிரதமர் நரேந்திர மோடி தனது 69 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட மாலியில் ஆசிரியர் சேது டெம்பேலே யார் ???

பிரதமர் நரேந்திர மோடி தனது 69 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் மாலி நாட்டின் பள்ளி ஆசிரியர் ஒருவரை குறிப்பிட்டார். பள்ளியில் ஆசிரியரான அவர் பெயர் சேது டெம்பேலே இவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலும், இந்திய தொடர்பான தகவல்களை ‘பாலிவுட் பாடல்களில் இந்திய அதிர்வெண்’ (Indian frequency on Bollywood songs) என்ற தலைப்பில் ஒரு மணி நேர வானொலி நிகழ்ச்சியை வழங்குகிறார்.

புதுடெல்லி:-

பிரதமர் நரேந்திர மோடி தனது 69 வது மான் கி பாத் நிகழ்ச்சியில் மாலியில் ஒரு ஆசிரியரைக் குறிப்பிட்டார்.  அவர் பெயர் சேது டெம்பேலே. 

மோடி தனது உரையில்:-

மாலி என்பது இந்தியாவிலிருந்து வெகு தொலைவில் உள்ள மேற்கு ஆபிரிக்காவின் பெரிய மற்றும் நில எல்லைக்குட்பட்ட நாடாகும். மாலியில் உள்ள கீட்டா நகரிலுள்ள உள்ள ஒரு  பள்ளியில்  சேது டெம்பேல் என்பவர் ஆசிரியராக உள்ளார். அவர் குழந்தைகளுக்கு ஆங்கிலம், இசை மற்றும் ஓவியம் ஆகியவற்றை கற்பிக்கிறார். சேது டெம்பேல் இந்தியாவை எல்லைகள் கடந்து நேசிக்கிறார் என்று பிரதமர் மான் கி பாத் நிகழ்ச்சியில் கூறினார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பகல் ஒரு மணி நேர வானொலி நிகழ்ச்சியை சேது டெம்பலே நிகழ்த்துவதாக பிரதமர் கூறினார். இந்த வானொலி நிகழ்ச்சி கடந்த 23 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சேது இந்தியாவை மிகவும் நேசிக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சேது இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று பிறந்துள்ளார். சமீபத்தில் அவர் மேலும் இரண்டு மணி நேர நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளார். இதில், பாலிவுட் படங்கள் தொடர்பாக பிரெஞ்சு மற்றும் மாலியின் நாட்டின் மொழியான பம்பராவில் கூறிவருகிறார்.

சேது டெம்பேல் இந்திய கலாச்சாரத்தை தனது தந்தை மூலமாக பெற்றுள்ளார் டெம்பேலே என்று பிரதமர் மோடி கூறினார். டெம்பேலேவின் தந்தை ஒரு திரையரங்கில் பணிபுரிந்துள்ளார். இந்திய படங்களும் அங்கு திரையிடப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர் தந்தை இந்திய குறித்தும் திரைபடங்கள் குறித்தும் கூறியுள்ளார். இந்த ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று சேது இந்தியில் இந்திய மக்களை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், மோடியின் கும்பமேளா  வருகையின் போது சேது மாலி தூதுக்குழுவின் ஒரு நபராக இருந்துள்ளார். இந்தியா மீதான சேது மீதான அன்பு நிச்சயமாக நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்று கூறினார் மோடி.

இந்திய சுற்றுப்பயணத்தின் போது கும்பமேளாவில் பங்கேற்க தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து பெருமையாக கூறியுள்ளார். மேலும், தான் இந்திய கலாச்சாரத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக கூறினார். இந்திய கலாச்சாரத்தைப் பற்றி அறிய இந்தியாவுக்கு மற்றொரு வருவதற்கு பிரார்த்தாகவும், இந்தியா தனக்கு இரண்டாவது வீடாக உணர்வதாகவும் கூறினார். இந்த விபரங்களை மோடி தனது மான் கி பாத் நிகழ்ச்சியில் பெருமையாக பதிவு செய்தார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate