உலகம்

ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட போலி இயேசு- இயேசுவின் மறுபிறவி என்று கூறிய நபர் கைது....

விவிலியத்தின் இயேசு நாதர் திரும்பி வந்து உலகை ரட்சிபார் கூறப்பட்டுள்ள நிலையில் விஸ்ஸாரியன் அதாவது இயேசுவின் மறுபிறவி என்று கூறி, கடந்த மூன்று தசாப்தங்களாக ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு புதிய வழிபாட்டு முறையை பரப்பி வந்த முன்னாள் போக்குவரத்து காவல்துறை அதிகாரியை ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாஸ்கோ:- 

கடந்த 1961 ஆம் வருடம் ஜனவரி மாதம் தெற்கு ரஷ்யாவில் உள்ள கிரசனோடர் என்னும் ஊரில் செர்கோய் அனடோலிவிட்ச் டோரொப் என்பவர் பிறந்தார்.  முதலில் அவர் சோவியத் ராணுவத்தில் பணி புரிந்தார்.  அதன் பிறகு மினுசின்ஸ்க் என்னும்  இடத்தில் போக்குவரத்துதுறை காவல் அதிகாரியாக பணி புரிந்தார்.  கடந்த 1989 ஆம் வருடம் அவர் பணி இழந்தார். தனது வேலையை இழந்த டொரோப், சோவியத் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கி சமயத்தில் தான் ஞானம் அடைந்ததாக  கூறினார். பின்னர், 1991 இல் கடைசி ஏற்பாட்டின் சர்ச் என்று அழைக்கப்படும் ஒரு இயக்கத்தை நிறுவினார், அதன் பிறகு தன்னை விஸ்ஸாரியன் அதாவது ஏசு கிறுஸ்துவின் மறுபிறவி எனச் சொல்லிக் கொண்டார்.

டோரொப் 29 வயதை அடைந்த போது கம்யூனிச நாடான சோவியத் யூனியன் உடைந்தது.  இதனால் நாட்டில் ஏற்பட்ட களேபரங்களிடையே பல உள்நாட்டு மத வளர்ச்சி உண்டானது.   கடந்த 2013 ஆம் வருடம் வெளியான ஒரு தகவலின்படி ரஷ்யப் பிற்போக்கு தேவாலயம் 4000க்கும் மேல் பட்ட மதங்கள் ரஷ்யாவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.  

அவ்வகையில் டோரொப் சோவியத் யூனியன் பிரிவுக்கு பிறகுத் தனது மதப் பிரிவை வளர்க்கத் தொடங்கினார்.

ஏசுவின் மறுபிறவி எனச் சொல்லப்படுவதால் டோரொப் எப்போதும் நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் வெண்ணிற அங்கி அணிந்து வாழ்ந்து வந்தார்.   அவர் கடைசி ஏற்பாடு என்னும் 12 அத்தியாய நூல் ஒன்றை வெளியிட்டு அதன் மூல தனது மதப் பிரிவின் கொள்கைகளை தெரிவித்தார்.  கடந்த 1991 மார்ச்சில் இருந்து மத  போதனை செய்து வரும் அவர் முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த பல நாடுகளுக்கும் சென்று வரத் தொடங்கினார்.   கடந்த 1995 இல் உருவான அவரது மதப்பிரிவு தேவாலய கடைசி ஏற்பாடு என அழைக்கப்பட்டது.

சைபீரியாவின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் உள்ள தொலைதூர குக்கிராமங்களில் உள்ள  பல ஆயிரம் மக்கள் இவரது வழிபாட்டை பின்தொடர்கிறார்கள். அதோடு ரஷ்யா முழுவதிலும் உள்ள தொழில் அதிபர்களும், வெளிநாட்டிலிருந்து வரும் யாத்ரீகர்களும் இவரது வழிபாட்டு முறையை பின்தொடர்கிறார்கள்.

“நான் கடவுள் இல்லை. இயேசுவை கடவுளாகப் பார்ப்பது தவறு. ஆனால் பரம பிதாவின் உயிருள்ள வார்த்தை நான். கடவுளான பரம பிதா சொல்ல விரும்பும் அனைத்தும், அவர் என் மூலமாகவே கூறுகிறார், ”என்று விஸாரியன் என்றழைக்கப்படும் டோரொப் கூறிவந்தார்.

முன்னர், பூமிக்கு நெருக்கமான ஒரு சுற்றுப்பாதையில் இருந்து மக்களை இயேசு கவனித்து வருவதாகவும், அன்னை மரியா தான்  “ரஷ்யாவை இயக்குகிறார்” என்றும் கூறிவந்த இவர் பின்னர் தன்னை தானே இயேசு என்று அறிவித்ததுக்கொண்டார்.

டோரொப் எழுதிய கடைசி ஏற்பாடு என்பது ரஷ்யப் பழங்கால தேவாலயம் மற்றும் புத்த மத கொள்கைகளை உள்ளடக்கியதாகும்.   அவருடைய பிரிவைப் பின்பற்றுவோர்  அவரை ஏசுவின் மறுபிறவி என முழுவதுமாக நம்பத் தொடங்கினர்.  

சுமார் 4000 முதல் 5000 தொண்டர்கள் அவர் கூறியதை முழுமையாகப் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.  இவர்கள் ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் பகுதிகளில் மட்டுமின்றி ஜெர்மனியிலும் இருந்தனர். இந்த புதிய இயேசு தன்னை பின்பற்றுபவர்கள் சைவ உணவுகளை தான் உன்ன வேண்டும் என்று கூறினார். அதோடு அவரை பின்பற்றும் சமூகத்தில் பண பரிமாற்றம் தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எல்லாவற்றிற்கும் மேலாக, இவரை பின்தொடர்பவர்கள் விஸ்ஸாரியனின் மதப்பிரிவு,டோரொப் பிறந்த 1961 ஆம் ஆண்டை முதல் ஆண்டாக கொண்டு புதிய நாள்காட்டியைப் பின்பற்றி வந்தனர்.   அவரது மதப்பிரிவில் இணைவோர் புகையிலை மற்றும் மதுபானம் உபயோகப்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   மேலும் பண பரிமாற்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன.

ஆனால் விசாரியன் தனது தொண்டர்களுடன் மிகக் குறைந்த நேரமே இருப்பார்.  அவர் ஒரு மலையின் உச்சியில் அனைத்து வசதிகளுடன் கொண்ட பங்களாவில் வசித்து வந்தார். அவருடைய தொண்டர்களை பொதுவாக அவரது உதவியாளர்கள் மற்றும் போதகர்கள் மட்டுமே சந்தித்து வந்தனர்.  

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/PDGvQne-68c" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

டோரொப் திடீரென ரஷ்யக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது அவரது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.  இது குறித்து ரஷ்ய காவல்துறை அதிகாரிகள் டோரொப் தன்னை ஏசுவின் மறுபிறவி என அழைத்து பலரிடம் பண மோசடி செய்துள்ளதாகவும். இதனை அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, இவ்வளவு காலம் விட்டுவிட்டு அதிகாரிகள் ஏன் இப்போது கைது செய்தார்கள் என்பதும் தெளிவாக தெரியவில்லை. Helicopters, armed police swoop in to arrest 'Russian Jesus' cult leader -  The Jerusalem Post

ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருச்சபை இந்த குழு தொடர்பாக  நீண்ட காலமாக கண்டித்து வந்தது. டொரோடோ உலகின் பல நாடுகளுக்கும் சென்று மக்களை மதம் மாற்றி வந்தார்.  தனது தொண்டர்களிடம் நிறைய பணம் வசூல் செய்து அதைத் தாராளமாகச் செலவு செய்து வந்துள்ளார் இதனால் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate