இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் சம்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீநகர்:-

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் அவந்திபுராவில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

சம்போரா என்ற பகுதியில் தேடுதல்வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இதையடுத்து, உடனடியாக பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் போன்ற தகவல்கள் தற்போதுவரை தெரியவில்லை. 

மேலும், என்கவுண்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate