அரசியல்

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது அ.தி.மு.க செயற்குழு கூட்டம்...முதல்வர் யார் என அறிவிக்கப்படுமா..?

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.45 மணியளவில் நடைபெற உள்ளது. இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

சென்னை:-

தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. கொரோனா பரவல் தீவிரமாக உள்ள போதிலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு மற்றும்  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் கட்சிகளுக்கிடையே சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது.

 
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.45 மணியளவில் நடைபெற உள்ளது.

கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

இதற்காக அக்கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் இடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் கட்சி வளாகத்தில் 2 இடங்களில் நிர்வாகிகள் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன. பிரமாண்ட எல்.இ.டி. டி.வி.க்களும் வைக்கப்பட்டு உள்ளன. செயற்குழு கூட்டத்தில் வழிகாட்டுதல் குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு, உறுப்பினர்கள் கருத்து கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி வளர்ச்சி பணிகள், தேர்தல் களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

அதிமுகவில் அடுத்த முதல்வவர் வேட்பாளர் யார் என்பதில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர்  யார் என்பது குறித்த அதிககாரப்பூர்வ அறிவிப்பு வருமா என்று தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate