தமிழ்நாடு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

 பரபரப்பான சூழலில் துவங்கிய அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழுவில் த​மிழர்களை நியமிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

மேலும் கொரோனா பரவல் குறைந்துள்ளதை ஏற்றுள்ள மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்றும், கொரோனா கால செயல்பாட்டுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இருமொழிக்கொள்கையே அதிமுக அரசின் கொள்கை. மொழி திணிப்பை அதிமுக அரசு ஏற்காது, அதிமுக நிர்வாகிகள் ஒன்றுபட்ட சிந்தனயோடு ஒன்றிணைந்து செயல்பட்டு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். மீண்டும் ஆட்சி மலர்ந்திட உழைப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate