அரசியல்

பாரதிய ஜனதா நாகரீக அரசியலை கடைப்பிடித்து வருகிறது -திருப்பதி நாராயணன்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், வேளாண் மசோதாக்கள், திருச்சியில் பெரியார் சிலைக்கு அவமதிப்பு, உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

பெரியார் சிலை அவமதிப்பு குறித்த கேள்விக்கு:-

 "நேற்றைய  தினம் திருச்சியில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவரை அவமானப் படுத்தி உள்ளனர். இதை பாஜக கண்டிக்கிறது. கனிமொழி பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதை சுட்டிக் காட்டி இது தான் மரியாதையா என கேட்டுள்ளது. இது போன்று கேட்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்யப்பட்டதா என கேள்வி எழுகிறது. தவறான தகவல்களை பரப்பி பதற்றத்தை உண்டாக்குவது திமுக வினருக்கு கை வந்த கலை. 

விமான நிலையத்தில் மத்திய காவல் படை துறை அதிகாரி உங்களுக்கு இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா என்று கேட்டது தொடர்பாக இதுவரை அவர் புகார் அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார். பா.ஜ க வை கண்டு திமுக அஞ்சுகிறது என தெளிவாக  புரிகிறது. பிரதமர் மீதும் இந்துக்கள் மீதும்  நடைபெரும் அநாகரீக செயல்களை  கண்டிக்க திமுக தயாராக இல்லை. பாரதிய ஜனதாவிடம் இருந்து நாகரிக அரசியலை திமுக கற்று கொள்ள வேண்டும்" என்றார்.


வேளாண் மசோதாக்கள் குறித்த கேள்விக்கு:-

வேளாண் சட்ட மசோதா குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன எதிர்க்கட்சிகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன. இந்த மூன்று அம்சங்களும் விவசாயத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். குறைந்தபட்ச ஆதார விலையை ஏன் இந்த சட்டத்தில் குறிப்பிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர் குறைந்த பட்ச ஆதார விலை எந்த சட்டத்தில் இருக்கின்றது என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்க வேண்டும் என்ற மன நிலையில் அவர்கள் உள்ளனர்.

இதுநாள் வரை இங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த சட்டம் அதை மாற்றும் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் விவசாயப் பொருட்களை விற்கலாம் என்ற நிலை வரும் பொழுது குறைந்தபட்ச ஆதார விலையை விட அதிக லாபம் கிடைக்கும் விவசாயிகளுக்கு அதிக ஆதார விலை கிடைக்க கூடாது என எதிர்கட்சிகள் கருதுவது ஏன் என்று தெரியவில்லை.  

விவசாயிகள் தங்களின் பொருட்களை சந்தைகளுக்கு சென்று விற்ற நிலை மாறி தற்போது வர்த்தகர்கள் விவசாயிகளைத் தேடி வந்து அவர்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு அற்புத நிலை தற்போது உருவாகியுள்ளது. இந்தியாவில் விவசாய துறையின் மூலம் மிகப்பெரிய எழுச்சி வரப்போகின்றது. 

மிகச்சரியாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மிகப்பெரிய வல்லரசாக கூடிய வாய்ப்பு உள்ளது. எம்எஸ் சுவாமிநாதன் அவர்களின் அறிக்கை படி தான் 6 வருடமாக வேளாண் கடன் சொட்டு நீர் பாசனம் போன்ற பல்வேறு விஷயங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று நேரடியாக விவசாயிகளிடம்  இந்த சட்டம் குறித்து பேச உள்ளோம்" என்று நாராயணன் பதிலளித்தார். 


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate