தமிழ்நாடு

சட்டவிரோதமாக இரிடியத்தை விற்க முயன்ற கும்பலை சுற்றி வளைத்த போலீசார்.!

ஜப்பான் நாட்டுக்கு அனுப்ப இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் தங்களிடம் உள்ளதாக கூறி பணம் பறிக்க நினைத்த மோசடி கும்பலை தூத்துக்குடியில் காவலர்கள் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் விற்பதற்கு உள்ளதாக கூறி காரில் சுற்றி வந்த மோசடி கும்பலை தூத்துகுடி மாவட்ட போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டுக்கு அனுப்ப இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் தங்களிடம் உள்ளதாக கூறி பணம் பறிக்க நினைத்த மோசடி கும்பலை தூத்துக்குடியில் காவலர்கள் கைது செய்துள்ளனர். தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் விற்பதற்கு உள்ளதாக கூறி மோசடி கும்பல் ஒன்று காரில் சுற்றி வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை கொண்டு ஒரு தனிப்படை அமைத்து தீவிர வாகன பரிசோதனையை மேற்கொண்டு வந்தனர். அந்த சோதனையில் பாண்டியாபுரத்தில் இனோவா கார் ஒன்றை சோதனை செய்த காவலர்கள் அந்த காரில் அரிவாள், கத்தி ஆகிய ஆயுதங்கள் மற்றும் ஆறுகள் குப்பிகளில் வைத்துள்ள ரசாயன கலவை பெட்டியை பறிமுதல் செய்துள்ளனர். 


காரில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் வைத்தியலிங்கம் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் கைப்பற்றிய ஆறு குப்பிகலும் 150 கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக காவலரிடம் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் ஜேவிசி நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓவிடமிருந்து கடந்த 2010ஆம் வருடம் ராக்கெட்டுக்கு உபயோகப்படுத்த இரிடியம் வாங்க செய்ததாகவும் மும்பையில் இருந்து ஜப்பானுக்கு இரிடியம் அனுப்பிய போது, ஒரு 10 பெட்டிகள் காணாமல் போனதாகவும், அதில் ஒரு பெட்டிலும் ஆறு இரிடியம் குப்பிகள் இருந்ததாகவும் திரைப்பட கதையை போல் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்த மாரிதாஸ், முருகன் ஆகிய இருவரையும் முத்துராமலிங்கம், வைத்திலியங்கம் இருக்கும் இடத்துக்கு வரவைத்து "ரேர் பீஸ்" ஒன்று உள்ளதாக தெரிவித்துள்ளனர். அப்படி அந்த ரேர் பீஸை வாங்க வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது தான் இவர்களின் நோக்கம்.

இதை தொடர்ந்து முத்துராமலிங்கம், வைத்தியலிங்கம், முருகன், மரிதாஸ் போன்ற நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த இரிடியத்தை பரிசோதனை செய்ய சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கும்பல் எத்தனை பேரை ஏமாற்றினர்கள் என்பதை விசாரணை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர்கள் கூறிய அனைத்து தகவலும் பொய்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இரிடியம் ஒரு கிராம் இந்திய பணத்தில் 7,796 ரூபாய் 25 பைசாவிற்கு அமேசான், அலிபாபா ஆகிய இணையத்தங்களில் விற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும், இரிடியம் இருப்பதாக யாராவது கூறினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate