உலகம்

ஐ.நா சபையில் பேசிய பிரதமரின் தடுப்பூசி குறித்த பேச்சுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!!

ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், தடுப்பூசி குறித்து, இந்திய பிரதமர் மோடி அளித்துள்ள வாக்குறுதிக்கு, என் நன்றி. நம் வளங்கள் மற்றும் திறமையை ஒன்றாக திரட்டி பணியாற்றினால் தான், கொரோனா தொற்றுக்கு முடிவு காண முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியாசிஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நியூயார்க்:-
ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துஉள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை எனப்படும், ஐ.நா., சபையின், 75ம் ஆண்டு பொதுச் சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில், பிரதமர் மோடி, நேற்று முன்தினம் பேசினார். 

அப்போது, 'உலகில், தAடுப்பூசிகளை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அதன் சார்பில், உலக சமூககத்துக்கு ஒரு உறுதியை வழங்குகிறேன். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு, அனைத்து மனிதர்களுக்கும் உதவ, இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோக திறன் முழுமையாக பயன்படுத்தப்படும்' என்றார்.

பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதிக்கு, உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியாசிஸ், 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளதாவது:

ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், தடுப்பூசி குறித்து, இந்திய பிரதமர் மோடி அளித்துள்ள வாக்குறுதிக்கு, என் நன்றி. நம் வளங்கள் மற்றும் திறமையை ஒன்றாக திரட்டி பணியாற்றினால் தான், கொரோனா தொற்றுக்கு முடிவு காண முடியும்.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate