அரசியல்

பரபரப்பான அரசியல் சூழலில் ஆதரவு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை.....!!

நேற்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அடுத்த மாதம் 7-ஆம் தேதி அதிகாரப்பூர்வாமாக தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ள்ள நிலையில், இன்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்ததால், சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே முதல்வர் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

7th Announcement of Chief Ministerial Candidate || அ.தி.மு.க. செயற்குழு  கூட்டத்தில் காரசார விவாதம் முதல்வர் வேட்பாளர் 7-ந்தேதி அறிவிப்பு எடப்பாடி  பழனிசாமி, ஓ ...

இந்த நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் ஆகியோருடன்  ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இருமொழிக் கொள்கையில் உறுதி : அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் 15  தீர்மானங்கள் நிறைவேற்றம்!! - Update News 360 | Tamil News Online | Live  News | Breaking News Online | Latest ...
முதல்வர் பழனிசாமி நடத்தும் அரசு கூட்டங்களில் பங்கேற்கும் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாவட்ட ஆட்சியாளர்களுடனான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
20-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40519.48 40211.22
என்.எஸ்.இ
11820.40 11898.25
1 கிராம்
Rupee 4709 Gold Rate
8 கிராம்
Rupee 37672 Gold Rate
1 கிராம்
Rupee 62.75 Gold Rate
1 கிலோ
Rupee 62750 Gold Rate