Just In

அதிமுக செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும் என நினைத்த திமுகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது

திங்கட்கிழமை (28.09.2020) அதிமுக செயற்குழு கூட்டம் நடந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும், அதில் குளிர் காயலாம் என்று நினைத்த திமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என்று கூறினார். வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைப்பது உறுதியாகி இருப்பதாகவும். அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.

அதிமுக செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கும், அதில் குளிர் காயலாம் என்று நினைத்த திமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் 129 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில்  அவரது திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பெஞ்சமின், சரோஜா, கடம்பூர் ராஜு, உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக செயற்குழு கூட்டம் ஆரோக்கியமான விவாதங்களுடன் நேற்று நடைபெற்று முடிந்து இருப்பதாக கூறினார். அதிமுக கூட்டத்தில் பூகம்பம் வெடிக்கும், குளறுபடி ஏற்படும். அதில் குளிர் காயலாம் என்று நினைத்த திமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுனார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வேளாண் மசோதா குறித்து திமுக திட்டமிட்ட நாடகத்தை நடத்தி வருவதாக கூறினார். 

வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைப்பது உறுதியாகி இருப்பதாகவும். அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார். இந்த வேளாண் மசோதாவால் விவசாயிகள் எந்தவித பிரச்சனையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும், திமுக இந்த விவகாரத்தை வேண்டுமென்றே அரசியலாக்கி வருவதாகவும் கூறினார். 

மத்திய அரசு ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, விவசாயிகளுக்கு எந்த வித திட்டங்களையும் கொண்டுவராமல், ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அளித்த அமைச்சர் ஜெயக்குமார்.

உதயநிதி அரசியல் நாகரீகம் தெரியாமல் பேசி வருகிறார் . அதிலும் தருதலை என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்.  தருதலையாக இருப்பவர் தான் பார்ப்பவர்களை எல்லாம் தருதலை என்று சொல்வார்கள் என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee