தமிழ்நாடு

விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார், மியாட் மருத்துவமனை நிர்வாகம்

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த 22-ந் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது . இந்த நிலையில், மியாட் மருத்துவமனை நிர்வாகம் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அறிக்கை வெளியிட்டுள்ளது

விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கடந்த இரு தினங்களாக காய்ச்சல், சளி தொல்லை இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர், கணவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டு உள்ள அதே மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

விஜயகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், விஜயகாந்த்துக்கு நோய் தொற்று அறிகுறி இல்லை என்றும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான பிரேமலதா விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee