உலகம்

15 கோடி கொரோனா சோதனை கருவிகள் விரைவில் விநியோகிக்கப்படும் - அதிபர் டிரம்ப்

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 லட்சத்தையும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தையும் கடந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவாக கொரோனா தொற்றை கண்டறியும் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:-

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவாக  கொரோனா வைரஸ் கண்டறியும் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள்,  சுகாதார மையங்கள் மற்றும் நல்வாழ்வு பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு 5 கோடி சோதனைக்  கருவிகள் வழங்கப்படும் என்று கூறினார் 

மேலும், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பழங்குடி தேசிய கல்லூரிகளுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் சோதனைக்  கருவிகள்  வழங்கப்படும் என்றும் இந்த சோதனைக்  கருவிகள் நிச்சயமாக பயனளிக்கும் என்றும் இதன் மூலம் வரும் நாட்களில்  நாம் கொரோனா  நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வர முடியும் என்று கூறினார் 

அமெரிக்காவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 10 லட்சம் கருவிகள் வழங்கப்பட  உள்ளன" என்றார்.

அதிபர் டிரம்ப்'பின் இந்த முடிவு அமெரிக்காவில் நிலவும் அதிக கொரோனா நோய்ப் பரவலை குறைத்து நாடு  மீண்டும் இயல்பு நிலையை எட்ட உதவும் என கூறப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee