தமிழ்நாடு

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு!!

சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில், முறையான அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள  வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைப் பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விவாசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ள  இந்த மசோதாக்களை அரசியல் லாபங்களுக்காக எதிர்த்து வருகின்றன.

அந்த வகையில், சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்த நிலையில், வள்ளுவர்கோட்டம் பகுதியில் முறையான அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee